இப்படி ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால் பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ————55-
பதவுரை
பெரிய வரை மார்வில்–பெரிய மலை போன்ற திருமார்பிலே பேர் ஆரம் பூண்டு–பெரிய ஹாரத்தை அணிந்து கொண்டு திரியுங்கால்–உலாவினால்