MUT 41

உலகளந்தானின் பிரம்மாண்டமான தோற்றம்

2322 மன்னுமணிமுடிநீண்டு அண்டம்போயெண்திசையும் *
துன்னுபொழிலனைத்தும்சூழ்கழலே * - மின்னை
உடையாகக்கொண்டு அன்றுலகளந்தான் * குன்றம்
குடையாகஆகாத்தகோ.
2322 maṉṉu maṇi muṭi nīṇṭu * aṇṭam poy ĕṇ ticaiyum *
tuṉṉu pŏzhil aṉaittum cūzh kazhale ** - miṉṉai
uṭaiyākak kŏṇṭu * aṉṟu ulaku al̤antāṉ * kuṉṟam
kuṭaiyāka ā kātta ko -41

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2322. When the lord who carried Govardhanā mountain as an umbrella to protect the cows and the cowherds measured the world, his diamond-studded crown touched the sky, his ankleted feet extended in all the eight directions, and encircled all the thick groves of the earth and his dress shone like lightning.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றம் கோவர்த்தனமலையை; குடையாக குடையாகக் கொண்டு; ஆ காத்த கோ பசுக்களை காப்பாற்றினவன்; அன்று முன்பு ஒரு சமயம்; மன்னு மணி ரத்தினங்களாலான; முடி நீண்டு கிரீடம் ஓங்கி வளர்ந்து; அண்டம் போய் அண்டத்தை அடைந்து; எண் திசையும் எட்டு திக்குகளையும்; துன்னு பொழில் நிறைத்த பூமண்டலம்; அனைத்தும் முழுவதையும்; சூழ் வியாபித்த; கழலே திருவடிகளானவை; மின்னை மின்னலை; உடையாக பீதாம்பரமாக; கொண்டு அணிந்து கொண்டு; உலகு அளந்தான் உலகை அளந்தான்
kunṛam kudaiyāga holding the gŏvardhana hill as an umbrella; ākāththa kŏ the swāmy (lord) who protected the cows; anṛu once upon a time; mannu maṇi mudi the apt crown which has gems; nīṇdu growing tall; aṇdam pŏy reaching up to the walls of the universe; eṇ dhisaiyum all the eight directions; thunnu pozhil anaiththum the entire earthen region which is inhabited (by jīvāthmās); sūzh pervaded; kazhalĕ being only the divine feet; minnai udai āgak koṇdu ulagu al̤andhān measured the worlds, wearing lightning as his divine clothing.