MUT 30

திருமால் தங்கியிருக்கும் இடங்கள்

2311 சேர்ந்ததிருமால் கடல்குடந்தைவேங்கடம்
நேர்ந்தவென்சிந்தை நிறை விசும்பும் * - வாய்ந்த
மறைபாடகமனந்தன் வண்டுழாய்க்கண்ணி *
இறைபாடியாயவிவை.
2311 cernta tirumāl * kaṭal kuṭantai veṅkaṭam *
nernta ĕṉ cintai niṟai vicumpum ** - vāynta
maṟai pāṭakam aṉantaṉ * vaṇ tuzhāyk kaṇṇi *
iṟai pāṭi āya ivai -30

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2311. Thirumāl adorned with a thulasi garland and resting on Adisesha on the ocean stays in Kudandai, in the milky ocean, in Thiruvenkatam, in my pure mind, in the divine sky, in beautiful Pādagam, in the Vedās, which talks about the Vaikuntam that's pleasant to my mind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடல் திருப்பாற்கடல்; குடந்தை திருக்குடந்தை; வேங்கடம் திருவேங்கடம்; நேர்ந்த நேர்மையான; என் சிந்தை என் மனம்; நிறை நிறைவுடைய; விசும்பும் பரமபதம்; வாய்ந்த பெருமை பேசும்; மறை வேதம்; பாடகம் திருப்பாடகம்; அனந்தன் ஆதிசேஷன்; ஆய இவை ஆகிய இவை; வண் துழாய் அழகிய துளசி; கண்ணி மாலை அணிந்துள்ள; திருமால் எம்பெருமான்; சேர்ந்த நித்யவாஸம் பண்ணும்; இறை பாடி க்ஷேத்திரங்களாகும்
kadal thiruppāṛkadal (milky ocean); kudandhai thirukkudandhai (present day kumbakŏṇam); vĕngadam thiruvĕngadam; nĕrndha en sindhai my suitable heart; niṛai visumbum the completely fulfilled ṣrīvaikuṇtam; vāyndha maṛai fitting vĕdham (sacred text); pādagam thiruppādagam (divine abode in present day kānchīpuram); ananthan ādhiṣĕshan; āya ivai all these; vaṇ thuzhāyk kaṇṇi one who is wearing the beautiful thul̤asi garland; thirumāl̤ sĕrndha where ṣrīman nārāyaṇa gives divine dharṣan appropriately; iṛai pādi capitals (places where he has taken residence)