The Place Where Brahmā Praises the Lord is Badarī
பிரமன் பகவானைத் துதிக்குமிடம் பதரி
979 கானிடையுருவைச் சுடுசரம் துரந்து *
கண்டுமுன்கொடுந்தொழிலுரவோன் *
ஊனுடையகலத்து அடுகணைகுளிப்ப *
உயிர்க்கவர்ந்துகந்தஎம்ஒருவன் **
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் *
சென்றுசென்றிறைஞ்சிட *
பெருகு வானிடைமுதுநீர்க்கங்கையின்கரைமேல் *
வதரியாச்சிராமத்துள்ளானே