Lord Kaṇṇa Himself is in Badarī
கண்ணபிரானே பதரியில் உள்ளான்
982 பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் *
பெருமுலைசுவைத்திட *
பெற்ற தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட * வளர்ந்தஎன்தலைவன் **
சேய்முகட்டுச்சியண்டமும்சுமந்த *
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு *
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் *
வதரியாச்சிராமத்துள்ளானே