PT 1.3.4

Worship Badarī Before the Body Weakens

உடல் தளராமுன் பதரியை வணங்கு

971 பீளைசோரக்கண்ணிடுங்கிப் *

பித்தெழமூத்துஇருமி *

தாள்கள்நோவத்தம்மில்முட்டித் *

தள்ளிநடவாமுன் **

காளையாகிக்கன்றுமேய்த்துக் *

குன்றெடுத்துஅன்றுநின்றான் *

வாளைபாயும்தண்தடம்சூழ் *

வதரிவணங்குதுமே

Text size