The One Who Swallowed the Worlds is Badarī Nārāyaṇa
உலகை உண்டவன் பதரி நாராயணன்
986 கொண்டல்மாருதங்கள் குலவரைதொகுநீர்க்
குரைகடலுலகுடன் அனைத்தும் *
உண்டமாவயிற்றோன் ஒண்சுடரேய்ந்த
உம்பரும் ஊழியும் ஆனான் *
அண்டமூடறுத்துஅன்று அந்தரத்துஇழிந்து
அங்குஅவனியாள் அலமர * பெருகும்
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.