verse 53

புரவியேழொருகாலுடைய தேரிலே திருச்சக்கர மொத்துக் கால சக்கரச்செங்கோல் நடாவி ஜ்யோதிச்சக்ர வொளிசுருக்கி அக்நீஷோமீய தேஜோம்ருதத்துக்கு ஊற்றும் மந்தேஹர்க்குச் செந்தீயும் முக்தி மார்க்கத்தலைவாசலும் கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்கத் தோள்வளையும் குழையும் திருச்செய்ய முடியு மாரமும் படையும் திகழும் பொன்மேனியும் செஞ்சுடர்த் தாமரைக் கண்ணுமாய் அணிநிறமூர்த்தி யீதென்னும்படி இரண்டையும் தன்னிறமாக்குகிற செய்யாளான வித்யையோடே அருக்கன் மேவின ஸதாத்யேய தேஜஸ்ஸின் ஸாம ரஸோத்காந நாம முள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிரமுகத்தினாலருளின தீர்த்தம்போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேதகுரூபதேசம்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo