சந்தோகனென்று ஸாமாந்யமாகாமல் முதலிலே பிரித்து யாழ் பயில் காநஸ்வரூபியைப் பாலையாகியென்று விசேஷிக்கையாலே வேதகீதச்சாமி நானென்ற ஸாமந்தோன்ற உத்கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி சரமகதி முடிவாகத் தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹாகோஷ நல்வேத வொலிபோலே மஹாத்யயந மென்னப் பாடுகையாலே இத்தை சாந்தோக்ய ஸமமென்பர்கள்.