Chapter 4

Desire being fulfilled, Āzhvār expresses his joy on seeing the Lord - (மை ஆர்)

எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்
“emperumān is so indifferent towards me. He hasn’t appeared to save me just like how He saved the elephant caught in the jaws of the crocodile or how he saved Prahalādan” pines Āzhvār. Bhagavān, aware of Āzhvār’s longing, appears in front of him. Āzhvār expresses his overflowing joy upon the appearance of Bhagavān in these hymns.
“எம்பெருமான் நம் விஷயத்தில் இப்படி உபேக்ஷையாக இருக்கிறானே. முதலை வாய்பட்ட யானையையும், பிரகலாதனையும் காத்ததுபோல் நமக்கு எதிரில் தோன்றி அருள் செய்யவில்லையே” என்று ஆழ்வார் எண்ணி ஏங்கினார்.

பகவான் ஆழ்வாருடைய விடாயை அறிந்து எதிரில் வந்து தோன்றினான். ஆழ்வார் தம்முடைய மகிழ்ச்சியை ஈண்டுப் + Read more
Verses: 3706 to 3716
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will reach the god, the dear life of the gods in the sky
  • TVM 9.4.1
    3706 ## மை ஆர் கருங்கண்ணி * கமல மலர்மேல் *
    செய்யாள் திருமார்வினில் சேர் * திருமாலே **
    வெய்யார் சுடர் ஆழி * சுரி சங்கம் ஏந்தும்
    கையா * உன்னைக் காணக் * கருதும் என் கண்ணே (1)
  • TVM 9.4.2
    3707 கண்ணே உன்னைக் * காணக் கருதி * என் நெஞ்சம்
    எண்ணே கொண்ட * சிந்தையதாய் நின்று இயம்பும் **
    விண்ணோர் முனிவர்க்கு என்றும் * காண்பு அரியாயை *
    நண்ணாதொழியேன் என்று * நான் அழைப்பனே (2)
  • TVM 9.4.3
    3708 அழைக்கின்ற அடிநாயேன் * நாய் கூழை வாலால் *
    குழைக்கின்றது போல * என் உள்ளம் குழையும் **
    மழைக்கு அன்று குன்றம் எடுத்து * ஆநிரை காத்தாய் *
    பிழைக்கின்றது அருள் என்று * பேதுறுவனே (3)
  • TVM 9.4.4
    3709 உறுவது இது என்று * உனக்கு ஆள் பட்டு * நின்கண்
    பெறுவது எதுகொல் என்று * பேதையேன் நெஞ்சம் **
    மறுகல் செய்யும் * வானவர் தானவர்க்கு என்றும் *
    அறிவது அரிய * அரியாய அம்மானே (4)
  • TVM 9.4.5
    3710 அரியாய அம்மானை * அமரர் பிரானை *
    பெரியானை * பிரமனை முன் படைத்தானை **
    வரி வாள் அரவின் அணைப் * பள்ளிகொள்கின்ற *
    கரியான் கழல் காணக் * கருதும் கருத்தே (5)
  • TVM 9.4.6
    3711 கருத்தே உன்னைக் * காணக் கருதி * என் நெஞ்சத்து
    இருத்தாக இருத்தினேன் * தேவர்கட்கு எல்லாம் **
    விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி * உயரத்து
    ஒருத்தா * உன்னை உள்ளும் * என் உள்ளம் உகந்தே (6)
  • TVM 9.4.7
    3712 உகந்தே உன்னை * உள்ளும் என் உள்ளத்து * அகம்பால்
    அகம் தான் அமர்ந்தே * இடம் கொண்ட அமலா **
    மிகும் தானவன் மார்வு அகலம் * இரு கூறா
    நகந்தாய் * நரசிங்கம் அது ஆய உருவே (7)
  • TVM 9.4.8
    3713 உரு ஆகிய * ஆறு சமயங்கட்கு எல்லாம் *
    பொரு ஆகி நின்றான் * அவன் எல்லாப் பொருட்கும் **
    அரு ஆகிய ஆதியை * தேவர்கட்கு எல்லாம் *
    கரு ஆகிய கண்ணனை * கண்டுகொண்டேனே (8)
  • TVM 9.4.9
    3714 கண்டுகொண்டு * என் கண் இணை ஆரக் களித்து *
    பண்டை வினையாயின * பற்றோடு அறுத்து **
    தொண்டர்க்கு அமுது உண்ணச் * சொல் மாலைகள் சொன்னேன் *
    அண்டத்து அமரர் பெருமான் * அடியேனே (9)
  • TVM 9.4.10
    3715 அடியான் இவன் என்று * எனக்கு ஆர் அருள் செய்யும்
    நெடியானை * நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் **
    கொடியானை * குன்றாமல் * உலகம் அளந்த
    அடியானை அடைந்து அடியேன் * உய்ந்தவாறே (10)
  • TVM 9.4.11
    3716 ## ஆறா மதயானை * அடர்த்தவன் தன்னை *
    சேறு ஆர் வயல் * தென் குருகூர்ச் சடகோபன் **
    நூறே சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
    ஏறே தரும் * வானவர் தம் இன் உயிர்க்கே (11)