Your browser does not support the audio element.
audio
3662 நெடுமாற்கடிமைசெய்வேன்போல் அவனைக்கருதவஞ்சித்து *
தடுமாற்றற்றதீக்கதிகள் முற்றும்தவிர்ந்தசதிர்நினைந்தால் *
கொடுமாவினையேன்அவனடியாரடியே கூடுமிதுவல்லால் *
விடுமாறென்பதென்? அந்தோ! வியன்மூவுலகு பெறினுமே. (2)
3663 வியன்மூவுலகுபெறினும் போய்த்தானேதானேயானாலும் *
புயல்மேகம்போல்திருமேனியம்மான் புனைபூங்கழலடிக்கீழ் *
சயமேயடிமைதலைநின்றார் திருத்தாள்வணங்கி * இம்மையே
பயனேயின்பம்யான்பெற்றது உறுமோபாவியேனுக்கே?
3664 உறுமோபாவியேனுக்கு? இவ்வுலகம்மூன்றும்உடன்நிறைய *
சிறுமாமேனிநிமிர்த்த என்செந்தாமரைக்கண் திருக்குறளன் *
நறுமாவிரைநாள்மலரடிக்கீழ்ப் புகுதலன்றிஅவனடியார் *
சிறுமாமனிசராய்என்னையாண்டார் இங்கேதிரியவே.
3665 இங்கேதிரிந்தேற்இழுக்குற்றென்? இருமாநிலம் முன்னுண்டுமிழ்ந்த *
செங்கோலத்தபவளவாய்ச் செந்தாமரைக்கணென்னம் மான் *
பொங்கேழ்புகழ்கள்வாயவாய்ப் புலன்கொள்வடிவு என்மனத்ததாய் *
அங்கேய்மலர்கள்கையவாய் வழிபட்டோடஅருளிலே.
3666 வழிபட்டோடஅருள்பெற்று மாயன்கோலமலரடிக்கீழ் *
சுழிபட்டோடும்சுடர்ச்சோதிவெள்ளத்து இன்புற்றிருந்தாலும் *
இழிபட்டோடும் உடலினிற்பிறந்து தன்சீர்யான்கற்று *
மொழிபட்டோடும்கவியமுதம் நுகர்ச்சியுறுமோ? முழுதுமே.
3667 நுகர்ச்சியுறுமோ? மூவுலகின் வீடுபேறுதன்கேழில் *
புகர்ச்செம்முகத்தகளிறட்ட பொன்னாழிக்கை யென்னம்மான் *
நிகர்ச்செம்பங்கியெரிவிழிகள் நீண்டஅசுரருயிரெல்லாம் *
தகர்த்துண்டுழலும்புட்பாகன் பெரியதனிமாப்புகழே.
3668 தனிமாப்புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாத்தான் தோன்றி *
முனிமாப்பிரமமுதல்வித்தாய் உலகம்மூன்றும்முளைப்பித்த *
தனிமாத்தெய்வத்தளிரடிக்கீழ்ப் புகுதலன்றிஅவனடியார் *
நனிமாக்கலவியின்பமே நாளும்வாய்க்கநங்கட்கே.
3669 நாளும்வாய்க்கநங்கட்கு நளிர்நீர்க்கடலைப்படைத்து * தன்
தாளும்தோளும்முடிகளும் சமனிலாதபலபரப்பி *
நீளும்படர்பூங்கற்பகக்காவும் நிறைபன்னாயிற்றின் *
கோளுமுடையமணிமலைபோல் கிடந்தான்தமர்கள் கூட்டமே.
3670 தமர்கள்கூட்டவல்வினையை நாசஞ்செய்யும் சதிர்மூர்த்தி *
அமர்கொளாழி சங்குவாள் வில்தண்டாதிபல்படையன் *
குமரன்கோலவைங்கணைவேள்தாதை கோதிலடியார்தம் *
தமர்கள் தமர்கள்தமர்களாம் சதிரேவாய்க்கதமியேற்கே.
3671 வாய்க்கதமியேற்கு ஊழிதோறூழியூழி * மாகாயாம்
பூக்கொள்மேனிநான்குதோள் பொன்னாழிக்கை யென்னம்மான் *
நீக்கமில்லாவடியார்தம் அடியாரடியாரடியாரெங்
கோக்கள் * அவர்க்கேகுடிகளாய்ச்செல்லும் நல்ல கோட்பாடே.
3672 நல்லகோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும்தான் நிறைந்த *
அல்லிக்கமலக்கண்ணனை அந்தண்குருகூர்ச்சடகோபன் *
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும்பத்தும்வல்லார்கள் *
நல்லபதத்தால்மனைவாழ்வர் கொண்டபெண்டிர் மக்களே. (2)