O Kaṇṇa! Grant Me the Grace to Worship You with My Hands.
கண்ணா! நின்னைக் கை தொழ எனக்கருள்
3460 இன்னமுதெனத்தோன்றி ஓரைவர்யாவரையும்மயக்க * நீவைத்த
முன்னமாயமெல்லால் முழுவேரரிந்து * என்னையுன்
சின்னமும்திருமூர்த்தியும் சிந்தித்தேத்திக்கைதொழவே யருளெனக்கு *
என்னம்மா! என்கண்ணா! இமையோர்தம்குலமுதலே!