Chapter 2

Āzhvār separated from Azhagar, cries out in his overwhelming grief; Emperumān comes to his rescue- (முந்நீர் ஞாலம்)

அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்
These divine hymns comprise Āzhvār's words filled with restless eagerness (words directed towards Bhagavān).
ஆழ்வார், தரித்திருக்கமாட்டாத துடிப்புடன் (பகவானிடம்) கூறும் வார்த்தைகள் நிரம்பிய பகுதி.

மூன்றாம் பத்து -இரண்டாம் திருவாய்மொழி – ‘முந்நீர்’-பிரவேசம்-

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே -ஸ்ரீ சீராமப்பிள்ளை, ‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு + Read more
Verses: 3024 to 3034
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will remove the suffering that the senses give
  • TVM 3.2.1
    3024 ## முந்நீர் ஞாலம் படைத்த * எம் முகில் வண்ணனே *
    அந் நாள் நீ தந்த * ஆக்கையின்வழி உழல்வேன் **
    வெம் நாள் நோய் வீய * வினைகளை வேர் அறப் பாய்ந்து *
    எந் நாள் யான் உன்னை * இனி வந்து கூடுவனே? (1)
  • TVM 3.2.2
    3025 வன் மா வையம் அளந்த * எம் வாமனா
    நின் பல் மா மாயப் * பல் பிறவியில் படிகின்ற யான் **
    தொல் மா வல்வினைத் * தொடர்களை முதல் அரிந்து *
    நின் மா தாள் சேர்ந்து * நிற்பது எஞ்ஞான்றுகொலோ? (2)
  • TVM 3.2.3
    3026 கொல்லா மாக்கோல் * கொலை செய்து பாரதப் போர் *
    எல்லாச் சேனையும் * இரு நிலத்து அவித்த எந்தாய் **
    பொல்லா ஆக்கையின் * புணர்வினை அறுக்கல் அறா *
    சொல்லாய் யான் உன்னைச் * சார்வது ஓர் சூழ்ச்சியே (3)
  • TVM 3.2.4
    3027 சூழ்ச்சி ஞானச் * சுடர் ஒளி ஆகி * என்றும்
    ஏழ்ச்சிக் கேடு இன்றி * எங்கணும் நிறைந்த எந்தாய் **
    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து * நின் தாள் இணைக்கீழ் *
    வாழ்ச்சி யான் சேரும் * வகை அருளாய் வந்தே (4)
  • TVM 3.2.5
    3028 வந்தாய் போலே * வந்தும் என் மனத்தினை நீ *
    சிந்தாமல் செய்யாய் * இதுவே இது ஆகில் **
    கொந்து ஆர்க் காயாவின் * கொழு மலர்த் திரு நிறத்த *
    எந்தாய் யான் உன்னை * எங்கு வந்து அணுகிற்பனே? (5)
  • TVM 3.2.6
    3029 கிற்பன் கில்லேன் * என்று இலன் முன நாளாய் (ல்) *
    அற்ப சாரங்கள் * அவை சுவைத்து அகன்றொழிந்தேன் **
    பற்பல் ஆயிரம் * உயிர் செய்த பரமா * நின்
    நற்பொன் சோதித்தாள் * நணுகுவது எஞ்ஞான்றே? (6)
  • TVM 3.2.7
    3030 எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து * இரங்கி நெஞ்சே *
    மெய்ஞ்ஞானம் இன்றி * வினை இயல் பிறப்பு அழுந்தி **
    எஞ்ஞான்றும் எங்கும் * ஒழிவு அற நிறைந்து நின்ற *
    மெய்ஞ் ஞானச் சோதிக் * கண்ணனை மேவுதுமே (7)
  • TVM 3.2.8
    3031 மேவு துன்ப வினைகளை * விடுத்துமிலேன் *
    ஓவுதல் இன்றி * உன் கழல் வணங்கிற்றிலேன் **
    பாவு தொல் சீர்க் கண்ணா * என் பரஞ்சுடரே *
    கூவுகின்றேன் காண்பான் * எங்கு எய்தக் கூவுவனே? (8)
  • TVM 3.2.9
    3032 கூவிக் கூவிக் * கொடுவினைத் தூற்றுள் நின்று *
    பாவியேன் பல காலம் * வழி திகைத்து அலமர்கின்றேன் **
    மேவி அன்று ஆ நிரை காத்தவன் * உலகம் எல்லாம் *
    தாவிய அம்மானை * எங்கு இனித் தலைப்பெய்வனே? (9)
  • TVM 3.2.10
    3033 தலைப்பெய் காலம் * நமன்தமர் பாசம் விட்டால் *
    அலைப்பூண் உண்ணும் * அவ் அல்லல் எல்லாம் அகல **
    கலைப் பல் ஞானத்து * என் கண்ணனைக் கண்டுகொண்டு *
    நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது * நீடு உயிரே (10)
  • TVM 3.2.11
    3034 ## உயிர்கள் எல்லா * உலக(மு)ம் உடையவனை *
    குயில் கொள் சோலைத் * தென் குருகூர்ச் சடகோபன் **
    செயிர் இல் சொல் இசை மாலை * ஆயிரத்துள் இப் பத்தும் *
    உயிரின்மேல் ஆக்கை * ஊனிடை ஒழிவிக்குமே (11)