Chapter 1
Dwelling on the beauty of Azhagar - (முடிச் சோதியாய்)
திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்
Āzhvār rejoices in being able to adore the exquisite beauty of Azhagar residing on Thirumālirum Solai, who grants boons to all who seek Him, like the divine celestial Karpaga tree.
திருமாலிருஞ்சோலையில் கேட்டார்க்கு வரமளிக்கும் கற்பக மரம் போல் இருக்கும் அழகரின் வடிவழகை அனுபவித்து ஆழ்வார் இன்பமடைகிறார்.
மூன்றாம் பத்து -முதல் திருவாய்மொழி – ‘முடிச்சோதி’-பிரவேசம்
முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்: இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் + Read more
Verses: 3013 to 3023
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will not be born again in this world surrounded by roaring oceans
- TVM 3.1.1
3013 ## முடிச் சோதியாய் * உனது முகச் சோதி மலர்ந்ததுவோ? *
அடிச் சோதி நீ நின்ற * தாமரையாய் அலர்ந்ததுவோ? **
படிச் சோதி ஆடையொடும் * பல் கலனாய் * நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? * திருமாலே கட்டுரையே (1) - TVM 3.1.2
3014 கட்டுரைக்கில் தாமரை * நின் கண் பாதம் கை ஒவ்வா *
சுட்டு உரைத்த நன் பொன் * உன் திருமேனி ஒளி ஒவ்வாது **
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் * புகழ்வு எல்லாம் பெரும்பாலும் *
பட்டுரையாய் புற்கு என்றே * காட்டுமால் பரஞ்சோதீ (2) - TVM 3.1.3
3015 பரஞ்சோதி நீ பரமாய் * நின் இகழ்ந்து பின் * மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் * படி ஓவி நிகழ்கின்ற **
பரஞ்சோதி நின்னுள்ளே * படர் உலகம் படைத்த * எம்
பரஞ்சோதி கோவிந்தா * பண்பு உரைக்கமாட்டேனே (3) - TVM 3.1.4
3016 மாட்டாதே ஆகிலும் * இம் மலர் தலை மா ஞாலம் *
நின் மாட்டு ஆய மலர் புரையும் * திருவுருவம் மனம் வைக்க **
மாட்டாத பல சமய * மதி கொடுத்தாய் * மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் * மா ஞாலம் வருந்தாதே? (4) - TVM 3.1.5
3017 வருந்தாத அரும் தவத்த * மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் *
வருந்தாத ஞானம் ஆய் * வரம்பு இன்றி முழுது இயன்றாய் **
வரும் காலம் நிகழ் காலம் * கழி காலம் * ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் * எங்கு உலக்க ஓதுவனே? (5) - TVM 3.1.6
3018 ஓதுவார் ஓத்து எல்லாம் * எவ் உலகத்து எவ் எவையும் *
சாதுவாய் நின் புகழின் * தகை அல்லால் பிறிது இல்லை **
போது வாழ் புனம் துழாய் * முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் * என் சொல்லி யான் வாழ்த்துவனே? (6) - TVM 3.1.7
3019 வாழ்த்துவார் பலர் ஆக * நின்னுள்ளே நான்முகனை *
மூழ்த்த நீர் உலகு எல்லாம் * படை என்று முதல் படைத்தாய் **
கேழ்த்த சீர் அரன் முதலாக் * கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து *
சூழ்த்து அமரர் துதித்தால் * உன் தொல் புகழ் மாசூணாதே? (7) - TVM 3.1.8
3020 மாசூணாச் சுடர் உடம்புஆய் * மலராது குவியாது *
மாசூணா ஞானம் ஆய் * முழுதும் ஆய் முழுது இயன்றாய் **
மாசூணா வான் கோலத்து * அமரர் கோன் வழிப்பட்டால் *
மாசூணா உன பாத * மலர்ச் சோதி மழுங்காதே? (8) - TVM 3.1.9
3021 மழுங்காத வைந் நுதிய * சக்கர நல் வலத்தையாய் *
தொழும் காதல் களிறு அளிப்பான் * புள் ஊர்ந்து தோன்றினையே **
மழுங்காத ஞானமே படை * ஆக மலர் உலகில் *
தொழும்பாயார்க்கு அளித்தால் * உன் சுடர்ச் சோதி மறையாதே? (9) - TVM 3.1.10
3022 மறை ஆய நால் வேதத்துள் நின்ற * மலர்ச் சுடரே *
முறையால் இவ் உலகு எல்லாம் * படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் **
பிறை ஏறு சடையானும் * நான்முகனும் இந்திரனும் *
இறை ஆதல் அறிந்து ஏத்த * வீற்றிருத்தல் இது வியப்பே? (10) - TVM 3.1.11
3023 ## வியப்பு ஆய வியப்பு இல்லா * மெய்ஞ் ஞான வேதியனை *
சயப் புகழார் பலர் வாழும் * தடம் குருகூர்ச் சடகோபன் **
துயக்கு இன்றித் தொழுது உரைத்த * ஆயிரத்துள் இப் பத்தும் *
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் * ஒலி முந்நீர் ஞாலத்தே (11)