O Wondrous Lord! If You Grace Me, Your Own Glory Will Be Enhanced.
மாயோனே! எனக்கு அருளினால் உன் பெருமை உயரும்
2836 நினைந்துநைந்துள்கரைந்துருகிஇமையோர்பலரும் முனிவரும் *
புனைந்தகண்ணிநீர்சாந்தம் புகையோடேந்திவணங்கினால் *
நினைந்தவெல்லாப்பொருள்கட்கும் வித்தாய்முதலிற் சிதையாமே *
மனஞ்செய்ஞானத்துன்பெருமை மாசூணாதோ? மாயோனே!