RNA 78

இராமானுச! என்னைப் பெரும் பக்தனாக்கினாயே!

3970 கருத்திற்புகுந்து உள்ளிற்கள்ளம்கழற்றி * கருதிய
வருத்தத்தினால் மிகவஞ்சித்து * நீயிந்தமண்ணகத்தே
திருத்தித்திருமகள்கேள்வனுக்காக்கியபின் என்னெஞ்சில்
பொருத்தப்படாது * எம்மிராமானுச! மற்றோர்பொய்ப்பொருளே.
3970 கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி * கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து ** நீ இந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் * என் நெஞ்சில்
பொருத்தப்படாது * எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே (78)
3970 karuttil pukuntu ul̤l̤il kal̤l̤am kazhaṟṟi * karutu ariya
varuttattiṉāl mika vañcittu ** nī inta maṇṇakatte
tiruttit tirumakal̤ kel̤vaṉukku ākkiya piṉ * ĕṉ nĕñcil
pŏruttappaṭātu * ĕm irāmānuca maṟṟu or pŏyppŏrul̤e (78)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3970. O Rāmānujā, concerned about my worries you removed the evil thoughts from my heart and helped me, making me a slave of the beloved of divine Lakshmi. No other thoughts enter my mind, only your true teachings.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
எம் இராமாநுச! எங்கள் இராமாநுசரே!; நீ கருது அரிய நீங்கள் எண்ணமுடியாத; வருத்தத்தினால் சிரமங்களுடன்; மிக வஞ்சித்து என்னை ஏமாற்றி; கருத்தில் புகுந்து என் மனதில் புகுந்து; உள்ளில் கள்ளம் கழற்றி என் குற்றங்களை; திருத்தி போக்கி என்னைத் திருத்தி; இந்த மண் அகத்தே இந்த உலகத்தில்; திருமகள் கேள்வனுக்கு திருமாலுக்கு; ஆக்கிய பின் ஆளாகும்படி செய்த பின்; மற்று ஓர் இதற்கு மாறான வேறு எந்த; பொய்ப்பொருளே தவறான விஷயமும்; என் நெஞ்சில் என் மனதில்; பொருத்தப்படாது பொருந்தாது
karuththil pugundhu ṭhinking that if staying at distance it may not be possible to reform his heart, he came and entered into myheart,; ul̤l̤il kal̤l̤am kazhaṝi removed āthmāpahāram (thinking that the āthmā is mine); karudhaṛiya what is not even imaginable in others minds; varuththaththināl with great pains/efforts,; miga vanjiththu keeping it very secret; nee (neeyĕ) you who only know that, and putting efforts; thiruththi like those who could fix a barren land as cultivatable; indha maṇṇagaththĕ in this world,; thirumagal̤ kĕl̤vanukku to ṣrī:pathi (ṣrīman nārāyaṇan) who is your destiny,; ākkiya pin after making (me) to be used in ḥis antha:puram (private quarters); en nenjil in my mind which your highness had reformed; maṝŏr poyp porul̤ a false meaning that is outside of that,; poruththap padādhu would not fit in my mind even if forcefully set.; karuththu based on how thoughts are based on mind/heart, it talks about manas (mind) only. l̤ike saying sindhai (thought to imply mind which is annihilated along with other faculties of body during total annihilation).; varuththam strain / efforts.