RNA 77

ஒருவரும் ஈயாத இன்னருள் ஈர்ந்தவன் இராமானுசன்

3969 ஈந்தனனீயாதவின்னருள் * எண்ணில்மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப்பல்பொருளால் * இப்படியனைத்தும்
ஏய்ந்தனன்கீர்த்தியினா லென்வினைகளைவேர்பறியக்
காய்ந்தனன் * வண்மையிராமானுசற்குஎன்கருத்தினியே?
3969 īyntaṉaṉ īyāta iṉṉarul̤ * ĕṇ il maṟaik kuṟumpaip
pāyntaṉaṉ * am maṟaip pal pŏrul̤āl ** ippaṭi aṉaittum
eyntaṉaṉ kīrttiyiṉāl ĕṉ viṉaikal̤ai * ver paṟiyak
kāyntaṉaṉ * vaṇmai irāmānucaṟku ĕṉ karuttu iṉiye? (77)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3969. Rāmānujā argued with the philosophers of other religions and became famous all through the world. He removed the results of my karmā. How could he have done anything more for me? He gives me sweet grace that he gives to no one else.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈயாத இன்னருள் எவர்க்கும் அருளாத இன்னருளை; ஈந்தனன் அடியேனுக்குக் கொடுத்தார்; எண் இல் கணக்கற்ற; மறைக் குறும்பை வேத விரோதி மதங்களை; அம் மறை அந்த வேத; பல் பொருளால் பொருள்களைக் கொண்டே; பாய்ந்தனன் கண்டித்தவரும்; கீர்த்தியினால் தமது கீர்த்தியாலே; இப்படி அனைத்தும் இப்பூமி எங்கும்; ஏய்ந்தனன் வியாபித்தவரும்; என் வினைகளை என் வினைகளை; வேர் பறியக் காய்ந்தனன் வேருடன் அறுத்தவரும்; வண்மை உதார குணமுடையவருமான; இராமாநுசற்கு இராமாநுசற்கு; என் இன்னமும் செய்யத்தக்கது என்று; கருத்தினியே? ஏதேனும் உண்டோ?
eendhanan he (emperumānār) granted me; in arul̤ the distinguished grace; eeyādha which has not been granted to anyone till now;; pāyndhanan he kicked out / pushed aside; eṇṇil countless; maṛaik kuṛumbai philosophies of mis-interpreters who were making mischief on vĕdhas and were propagating it that way and were pushing true meanings aside;; keerththiyināl by his fame which; ĕyndhanan pervaded; ip padi anaiththum the whole of earth,; kāyndhanan he drove away; en vinaigal̤ai my karmas (effects of my deeds); vĕr paṛiya to be gone without trace;; en what; ini next/now is; karuththu the thought in the mind; irāmānusaṛku of emperumānār; vaṇmai the most generous.; ; ;