Chapter 2

Thirunaraiyur 9 - (புள் ஆய்)

திருநறையூர் 9
Thirunaraiyur 9 - (புள் ஆய்)
The āzhvār joyfully expresses his deep attachment and devotion towards Thirunaraiyur Nambi in these verses.
திருநறையூர் நம்பியின்பால் தமக்குள்ள ஆழ்ந்த பற்றினை ஈண்டுப் பரக்கக் கூறி மகிழ்கிறார் ஆழ்வார்.
Verses: 1558 to 1567
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and be happy with the Gods
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 7.2.1

1558 புள்ளாய்ஏனமுமாய்ப் புகுந்து * என்னையுள்ளங்கொண்ட
கள்வா! என்றலும் என்கண்கள்நீர்கள்சோர்தருமால் *
உள்ளேநின்றுருகி நெஞ்சம்உன்னையுள்ளியக்கால் *
நள்ளேன்உன்னையல்லால் நறையூர்நின்றநம்பீயோ! (2)
1558 ## புள் ஆய் ஏனமும் ஆய்ப் புகுந்து * என்னை உள்ளம் கொண்ட *
கள்வா என்றலும் * என் கண்கள் நீர்கள் சோர்தருமால் **
உள்ளே நின்று உருகி * நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் *
நள்ளேன் உன்னை அல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ 1
1558 ## pul̤ āy eṉamum āyp pukuntu * ĕṉṉai ul̤l̤am kŏṇṭa *
kal̤vā ĕṉṟalum * ĕṉ kaṇkal̤ nīrkal̤ cortarumāl **
ul̤l̤e niṉṟu uruki * nĕñcam uṉṉai ul̤l̤iyakkāl *
nal̤l̤eṉ uṉṉai allāl * naṟaiyūr niṉṟa nampīyo-1

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1558. When I praise you saying, “You took the form of a swan and a boar. You, a thief, entered my heart, ” my eyes fill with tears and my heart melts and thinks of you only. I will not approach anyone but you, O Nambi, god of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நறையூர் நின்ற நறையூர் நின்ற; நம்பீயோ! நம்பியே! பூர்ணனே!; புள்ளாய் ஹம்ஸமாகவும்; ஏனமுமாய் வரஹமாகவும்; புகுந்து என்னுள்ளே புகுந்து; என்னை உள்ளம் என் உள்ளத்தை; கொண்ட கவர்ந்து கொண்ட; கள்வா! கள்வனே!; என்றலும் என்று சொன்னவுடனே; என் கண்கள் என் கண்களிலிருந்து; நீர்கள் கண்ணீர்; சோர்தருமால் பெருகுகின்றது என்ன ஆச்சர்யம்; நெஞ்சம் உன்னை என் மனம் உன்னை; உள்ளியக்கால் நினைத்தால்; உள்ளே நின்று உள்ளே ஹ்ருதயம்; உருகி உருகுகிறது; உன்னை உன்னைத் தவிர்த்து; அல்லால் வேறொருவரையும் வேறொன்றையும்; நள்ளேன் நேசிக்கமாட்டேன்

PT 7.2.2

1559 ஓடாவாளரியின் உருவாய்மருவி * என்றன்
மாடேவந்து அடியேன்மனங்கொள்ளவல்லமைந்தா! *
பாடேன்தொண்டர்தம்மைக் கவிதைப்பனுவல்கொண்டு *
நாடேன்உன்னையல்லால் நறையூர்நின்றநம்பீயோ!
1559 ஓடா ஆள் அரியின் * உரு ஆய் மருவி * என் தன்
மாடே வந்து * அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா **
பாடேன் தொண்டர் தம்மைக் * கவிதைப் பனுவல் கொண்டு *
நாடேன் உன்னை அல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ 2
1559 oṭā āl̤ ariyiṉ * uru āy maruvi * ĕṉ-taṉ
māṭe vantu * aṭiyeṉ maṉam kŏl̤l̤a valla maintā **
pāṭeṉ tŏṇṭar-tammaik * kavitaip paṉuval kŏṇṭu *
nāṭeṉ uṉṉai allāl * naṟaiyūr niṉṟa nampīyo-2

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1559. As a strong man-lion that never retreats you killed Hiranyan. You came to me and entered my heart. I will not sing and praise others with my pāsurams, I will not approach anyone except you, O Nambi, god of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓடா ஆள் பார்த்து அறியாத; அரியின் நரசிம்மமாய்; என் தன் மாடே என் அருகில்; உருவாய் தோன்றி; மருவி வந்து வந்து என்னோடு கலந்து; அடியேன் மனம் என் மனதை; கொள்ள உன்னுடையதாக; வல்ல மைந்தா! ஆக்கிக் கொண்டாய்; பனுவல் இலக்கணம் வழுவாத; கவிதை கொண்டு கவிதைகளைக் கொண்டு; தொண்டர் தம்மை நீசர்களை; பாடேன் பாட மாட்டேன்; உன்னை உன்னைத்தவிர; அல்லால் வேறொருவரை வேறொன்றை; நாடேன் பற்றமாட்டேன்; நறையூர் நறையூர்; நின்ற நம்பீயோ! நின்ற நம்பியே!

PT 7.2.3

1560 எம்மானும்எம்மனையும் என்னைப்பெற்றொழிந்ததற்பின் *
அம்மானும்அம்மனையும் அடியேனுக்காகிநின்ற *
நன்மானவொண்சுடரே! நறையூர்நின்றநம்பீ! * உன்
மைம்மானவண்ணமல்லால் மகிழ்ந்துஏத்தமாட்டேனே.
1560 எம்மானும் எம் அனையும் * என்னைப் பெற்று ஒழிந்ததற்பின் *
அம்மானும் அம்மனையும் * அடியேனுக்கு ஆகி நின்ற **
நல் மான ஒண் சுடரே * நறையூர் நின்ற நம்பீ * உன்
மைம் மான வண்ணம் அல்லால் * மகிழ்ந்து ஏத்தமாட்டேனே 3
1560 ĕmmāṉum ĕm aṉaiyum * ĕṉṉaip pĕṟṟu ŏzhintataṟpiṉ *
ammāṉum ammaṉaiyum * aṭiyeṉukku āki niṉṟa **
nal māṉa ŏṇ cuṭare * naṟaiyūr niṉṟa nampī * uṉ
maim māṉa vaṇṇam allāl * makizhntu ettamāṭṭeṉe-3

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1560. My father and mother left this world after they gave birth to me. You are father and mother for me, your devotee. You are a beautiful bright light, O Nambi, god of Naraiyur. I will not praise anything happily except your beautiful dark color.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்மானும் என் தந்தையும்; எம் அனையும் எம் தாயும்; என்னைப் பெற்று என்னைப் பெற்றெடுத்து; ஒழிந்ததற்பின் வளர்த்த பின்; அடியேனுக்கு அடிமைத்தனம் உள்ள எனக்கு; அம்மானும் அம்மனையும் தந்தையும் தாயும்; ஆகிநின்ற நீயே ஆகி நின்றாய்; நல் மான பெருமைபொருந்திய; ஒண் சுடரே! அழகிய ஒளிமயமான; நறையூர் நறையூர்; நின்ற நம்பீ! நின்ற நம்பியே!; மைம் மான வண்ணம் மை போன்ற நிறமுடைய; உன் அல்லால் உன்னையல்லால் வேறொருவரை; மகிழ்ந்து மனமுவந்து; ஏத்த மாட்டேனே துதிக்கமாட்டேன்

PT 7.2.4

1561 சிறியாய்ஓர்பிள்ளையுமாய் உலகுண்டுஓராலிலைமேல்
உறைவாய்! * என்நெஞ்சினுள்ளேஉறைவாய் உறைந்ததுதான் *
அறியாதிருந்துஅறியேன் அடியேன், அணிவண்டுகிண்டும் *
நறைவாரும்பொழில்சூழ் நறையூர்நின்றநம்பீயோ!
1561 சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் * உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய் * என் நெஞ்சின் உள்ளே * உறைவாய் உறைந்தது தான் **
அறியாது இருந்தறியேன் * அடியேன் அணி வண்டு கிண்டும் *
நறை வாரும் பொழில் சூழ் * நறையூர் நின்ற நம்பீயோ 4
1561 ciṟiyāy or pil̤l̤aiyum āy * ulaku uṇṭu or āl ilaimel
uṟaivāy * ĕṉ nĕñciṉ ul̤l̤e * uṟaivāy uṟaintatu-tāṉ **
aṟiyātu iruntaṟiyeṉ * aṭiyeṉ-aṇi vaṇṭu kiṇṭum *
naṟai vārum pŏzhil cūzh * naṟaiyūr niṉṟa nampīyo-4

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1561. You slept as a little baby on the banyan leaf and swallowed the world. You entered my heart and stayed there, but I, your slave, did not know you were there. Now your devotee, I have realized that you are in my heart. You are our Nambi and you stay in Naraiyur surrounded with groves dripping with honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அணி வண்டு அழகிய வண்டுகள்; கிண்டும் நிறைந்திருப்பதால்; நறை வாரும் தேன் பெருகும்; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; நறையூர் நறையூர்; நின்ற நம்பீயோ! நின்ற நம்பியே!; சிறியாய் ஓர் மிகச் சிறிய; பிள்ளையுமாய் குழந்தையாய்; உலகு உண்டு உலகங்களை உண்டு; ஓர் ஆலிலை மேல் ஓர் ஆலிலை மேல்; உறைவாய் துயின்றவனே!; என் நெஞ்சின் என் மனதின்; உள்ளே உறைவாய் உள்ளே இருப்பவனே!; உறைந்தது தான் நீ உள்ளே இருப்பதை; அடியேன் அறியாது நான் தெரிந்து கொள்ளாமல்; இருந்து அறியேன் இருந்தது லில்லை

PT 7.2.5

1562 நீண்டாயைவானவர்கள் நினைந்துஏத்திக்காண்பரிதால் *
ஆண்டாயென்றுஆதரிக்கப்படுவாய்க்கு நான்அடிமை *
பூண்டேன் * என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் *
நாண்தான்உனக்கொழிந்தேன் நறையூர்நின்றநம்பீயோ!
1562 நீண்டாயை வானவர்கள் * நினைந்து ஏத்திக் காண்பு அரிதால் *
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு * நான் அடிமை
பூண்டேன் ** என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் *
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் * நறையூர் நின்ற நம்பீயோ 5
1562 nīṇṭāyai vāṉavarkal̤ * niṉaintu ettik kāṇpu aritāl *
āṇṭāy ĕṉṟu ātarikkap paṭuvāykku * nāṉ aṭimai
pūṇṭeṉ ** ĕṉ nĕñciṉ ul̤l̤e pukuntāyaip pokal ŏṭṭeṉ *
nāṇ-tāṉ uṉakku ŏzhinteṉ * naṟaiyūr niṉṟa nampīyo-5

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1562. O tall one, it is hard for the gods to know who you are and to praise you. I knew that you protect your devotees if they come to you for refuge. You entered the heart of me, your slave, and I will not allow you to leave it. All the days I live will be only to praise you, O Nambi, god of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீண்டாயை நெடுமாலாகிய; வானவர்கள் உன்னை தேவர்கள்; நினைந்து ஏத்தி நினைந்து துதித்து; காண்பு காண்பதானது; அரிதால் அரிதான காரியம் ஆச்சர்யமும் கூட; ஆண்டாய் என்று எங்கள் ஸ்வாமியே! என்று; ஆதரிக்க தேவர்களால்; படுவாய்க்கு துதிக்கப்படும் உன்விஷயத்தில்; நான் அடிமை நான் உன்னை; பூண்டேன் துதிக்கப் பெற்றேன்; என் நெஞ்சின் உள்ளே எனது மனத்திலுள்ளே; புகுந்தாயை புகுந்திருக்கிற உன்னை இனி வேறு; போகலொட்டேன் எங்கும் போக விட மாட்டேன்; உனக்கு உன் விஷயத்திலே; நாண் தான் ஒழிந்தேன் வெட்கமற்றவனானேன்; நறையூர் நின்ற நம்பீயோ! நறையூர் நின்ற நம்பியே!

PT 7.2.6

1563 எந்தாதைதாதை அப்பால்எழுவர்பழவடிமை
வந்தார் * என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன் *
அந்தோ! என்னாருயிரே! அரசே!அருளெனக்கு *
நந்தாமல்தந்தஎந்தாய்! நறையூர்நின்றநம்பீயோ!
1563 எம் தாதை தாதை அப்பால் * எழுவர் பழ அடிமை
வந்தார் * என் நெஞ்சின் உள்ளே * வந்தாயைப் போகல் ஒட்டேன் **
அந்தோ! என் ஆர் உயிரே * அரசே அருள் எனக்கு *
நந்தாமல் தந்த எந்தாய்! * நறையூர் நின்ற நம்பீயோ 6
1563 ĕm tātai tātai appāl * ĕzhuvar pazha aṭimai
vantār * ĕṉ nĕñciṉ ul̤l̤e * vantāyaip pokal ŏṭṭeṉ **
anto!-ĕṉ ār uyire * arace arul̤ ĕṉakku *
nantāmal tanta ĕntāy! * naṟaiyūr niṉṟa nampīyo-6

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1563. My father, his father and our ancestors for seven generations and others before them all served you and they were your slaves. You entered my heart and I will not let you go away. You, my dear life, my king, my father, gave your grace to me without refusing, O Nambi, god of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் ஆருயிரே! என் ஆருயிரே!; அரசே! அரசே!; எனக்கு அருள் எனக்கு அருள்; நந்தாமல் தந்த குறைவின்றி தந்த; எந்தாய்! பெருமானே!; எம் தாதை நானும் என் தந்தையும்; தாதை அவர் தந்தையும்; அப்பால் எழுவர் ஏழு தலைமுறையினரும்; பழ அடிமை பழைய கைங்கர்யம்; வந்தார் செய்து வந்தவர்கள்; என் நெஞ்சின் உள்ளே என் நெஞ்சின் உள்ளே; வந்தாயைப் வந்து புகுந்த உன்னை; போகலொட்டேன் போகலொட்டேன்; நறையூர் நறையூர்; நின்ற நம்பீயோ! நின்ற நம்பியே!

PT 7.2.7

1564 மன்னஞ்ச ஆயிரந்தோள்மழுவில்துணித்தமைந்தா! *
என்னெஞ்சத்துள்ளிருந்து இங்குஇனிப்போய்ப்பிறரொருவர் *
வன்னெஞ்சம்புக்கிருக்கவொட்டேன் வளைத்துவைத்தேன் *
நன்னெஞ்சவன்னம்மன்னும் நறையூர்நின்றநம்பீயோ!
1564 மன் அஞ்ச ஆயிரம் தோள் * மழுவில் துணித்த மைந்தா *
என் நெஞ்சத்துள் இருந்து * இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர் **
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் * வளைத்து வைத்தேன் *
நல் நெஞ்ச அன்னம் மன்னும் * நறையூர் நின்ற நம்பீயோ 7
1564 maṉ añca āyiram tol̤ * mazhuvil tuṇitta maintā *
ĕṉ nĕñcattul̤ iruntu * iṅku iṉip poyp piṟar ŏruvar **
val nĕñcam pukku irukka ŏṭṭeṉ * val̤aittu vaitteṉ *
nal nĕñca aṉṉam maṉṉum * naṟaiyūr niṉṟa nampīyo-7

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1564. You cut off the thousand arms of Bānasuran terrifying all other kings when they saw it. You have entered my heart and I will not allow you to go to another person’s evil heart and stay there. I attracted you and have kept you in my heart. You go to stay in the hearts of good people O Nambi, god of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்ச நல்ல மனதையுடையவளும்; அன்னம் அன்ன நடையை உடையவளுமான; மன்னும் திருமகளுடன் இருக்கும்; நறையூர் நறையூர்; நின்ற நம்பீயோ! நின்ற நம்பியே!; மன் அஞ்ச மன்னர்கள் அஞ்சும்படி; ஆயிரம்தோள் ஆயிரம் தோள்களை; மழுவில் கோடாலியால்; துணித்த மைந்தா! துணித்த மைந்தா!; என் நெஞ்சத்துள் இருந்து என் மனதிலிருந்து; இங்கு இங்கிருந்து; இனிப் போய் வேறோரிடம்போய்; பிறர் ஒருவர் வேறொருவருடைய; வன் உன் பிரிவால் வருந்தாத வன்மையான; நெஞ்சம் புக்கு நெஞ்சத்தில் புகுந்து; இருக்க ஒட்டேன் இருக்கவிட மாட்டேன்; வளைத்து நீ எங்கும் போகாதபடி; வைத்தேன் தடுத்து வைத்தேன்

PT 7.2.8

1565 எப்போதும்பொன்மலரிட்டு இமையோர்தொழுது * தங்கள்
கைப்போதுகொண்டுஇறைஞ்சிக் கழல்மேல்வணங்க நின்றாய் *
இப்போதுஎன்னெஞ்சினுள்ளே புகுந்தாயைப்போகலொட்டேன் *
நற்போதுவண்டுகிண்டும் நறையூர்நின்றநம்பீயோ!
1565 எப்போதும் பொன் மலர் இட்டு * இமையோர் தொழுது * தங்கள்
கைப்போது கொண்டு இறைஞ்சிக் * கழல்மேல் வணங்க நின்றாய் **
இப்போது என் நெஞ்சின் உள்ளே * புகுந்தாயைப் போகல் ஒட்டேன் *
நல் போது வண்டு கிண்டும் * நறையூர் நின்ற நம்பீயோ 8
1565 ĕppotum pŏṉ malar iṭṭu * imaiyor tŏzhutu * taṅkal̤
kaippotu kŏṇṭu iṟaiñcik * kazhalmel vaṇaṅka niṉṟāy **
ippotu ĕṉ nĕñciṉ ul̤l̤e * pukuntāyaip pokal ŏṭṭeṉ *
nal potu vaṇṭu kiṇṭum * naṟaiyūr niṉṟa nampīyo-8

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1565. Always the gods with eyes that do not blink place golden blossoms at your feet. They carry flowers in their hands and come to worship your ankleted feet. Now you have entered my heart and I will not allow you to leave. O Nambi, you stay in Naraiyur where the bees plunge into beautiful buds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் போது நல்ல புஷ்பங்களிலே; வண்டு கிண்டும் வண்டுகள் தேன் பருகும்; நறையூர் நறையூரில்; நின்ற நம்பீயோ! இருக்கும் நம்பியே!; இமையோர் எப்போதும் தேவர்கள் எப்போதும்; பொன் மலர் இட்டு பொன் மலர் இட்டு; தொழுது தங்கள் தொழுது தங்களுடைய; கைப்போது கொண்டு புஷ்பம் போன்ற கைகளினால்; இறைஞ்சி அஞ்சலி செய்து; கழல் மேல் உன் பாதங்களை; வணங்க நின்றாய் வணங்கும்படி நின்றவனே!; இப்போது என் இப்போது என்; நெஞ்சின் உள்ளே நெஞ்சின் உள்ளே; புகுந்தாயைப் புகுந்த உன்னை; போகலொட்டேன் போகலொட்டேன

PT 7.2.9

1566 ஊனேராக்கைதன்னை உழந்தோம்பிவைத்தமையால் *
யானாய்என்தனக்காய் அடியேன்மனம்புகுந்த
தேனே! * தீங்கரும்பின்தெளிவே! என் சிந்தைதன்னால் *
நானேஎய்தப்பெற்றேன் நறையூர்நின்றநம்பீயோ!
1566 ஊன் நேர் ஆக்கை * தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் *
யான் ஆய் என் தனக்கு ஆய் * அடியேன் மனம் புகுந்த
தேனே ** தீங் கரும்பின் தெளிவே * என் சிந்தை தன்னால் *
நானே எய்தப் பெற்றேன் * நறையூர் நின்ற நம்பீயோ 9
1566 ūṉ ner ākkai * taṉṉai uzhantu ompi vaittamaiyāl *
yāṉ āy ĕṉ-taṉakku āy * aṭiyeṉ maṉam pukunta
teṉe ** tīṅ karumpiṉ tĕl̤ive * ĕṉ cintai-taṉṉāl *
nāṉe ĕytap pĕṟṟeṉ * naṟaiyūr niṉṟa nampīyo-9

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1566. You gave me this body made of flesh and I have suffered in this world. Now you, sweet as the clear juice of sweet sugarcane, are mine. I am your slave and you have entered my heart. I thought of you always and reached you, O Nambi of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யான் ஆய் என்னுள் இருப்பவனே!; என் தனக்கு ஆய் எனக்காகவே; அடியேன் மனம் என் மனதில்; புகுந்த தேனே! புகுந்த தேனே!; தீங்கரும்பின் இனிமையான கரும்பின்; தெளிவே! ரசம் போன்றவனே!; நறையூர் நறையூரில்; நின்ற நம்பீயோ! இருக்கும் நம்பியே!; ஊன் நேர் இந்த உடம்பை; ஆக்கை தன்னை இந்த சரீரத்தை; உழந்து ஓம்பி சிரமப்பட்டு வளர்த்து; வைத்தமையால் வைத்ததால்; என் சிந்தை தன்னால் என் சிந்தையினால்; நானே இப்போது நானே வந்து உன்னை; எய்தப் பெற்றேன் அடையப்பெற்றேன்

PT 7.2.10

1567 நன்னீர்வயல்புடைசூழ் நறையூர்நின்றநம்பியை *
கன்னீரமால்வரைத்தோள் கலிகன்றிமங்கையர்கோன் *
சொன்னீரசொல்மாலை சொல்லுவார்கள் * சூழ்விசும்பில்
நன்னீர்மையால்மகிழ்ந்து நெடுங்காலம்வாழ்வாரே (2)
1567 ## நல் நீர் வயல் புடை சூழ் * நறையூர் நின்ற நம்பியை *
கல் நீர மால் வரைத் தோள் * கலிகன்றி மங்கையர் கோன் **
சொல் நீர சொல் மாலை * சொல்லுவார்கள் சூழ் விசும்பில் *
நல் நீர்மையால் மகிழ்ந்து * நெடுங் காலம் வாழ்வாரே 10
1567 ## nal nīr vayal puṭai cūzh * naṟaiyūr niṉṟa nampiyai *
kal nīra māl varait tol̤ * kalikaṉṟi maṅkaiyar-koṉ **
cŏl nīra cŏl-mālai * cŏlluvārkal̤ cūzh vicumpil *
nal nīrmaiyāl makizhntu * nĕṭuṅ kālam vāzhvāre-10

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1567. Kaliyan, the chief of Thirumangai with arms strong as mountains composed a garland of pāsurams with beautiful words on the Nambi, the god of Naraiyur surrounded with fields filled with pure water. If devotees learn and recite these pāsurams they will go to the spiritual world and stay there happily forever.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நீர் வயல் நல்ல நீரையுடைய; புடை சூழ் வயல்கள் சூழ்ந்த; நறையூர் நறையூரில்; நின்ற நம்பியை! இருக்கும் நம்பியை!; கல் நீர மால் ஒலிக்கின்ற அருவி நீரையுடைய; வரை மலைபோன்ற; தோள் திருத்தோள்களை யுடையவரும்; மங்கையர் திருமங்கை; கோன் நாட்டுத் தலைவருமான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; சொல் நீர புகழை இயல்பாக உடைய; சொல் மாலை பாசுரங்களை; சொல்லுவார்கள் அனுஸந்திப்பவர்கள்; சூழ் விசும்பில் பரமபதத்தில்; நல் நல்ல ஸ்வபாவத்துடன்; நீர்மையால் நித்தியகைங்கர்யம் செய்து கொண்டு; மகிழ்ந்து நெடுங் காலம் பலகாலம் மகிழ்ச்சியுடன்; வாழ்வாரே வாழ்வார்கள்