Your browser does not support the audio element.
audio
1538 கிடந்தநம்பிகுடந்தைமேவிக் கேழலாயுலகை
இடந்தநம்பி * எங்கள்நம்பி எறிஞரரணழிய *
கடந்தநம்பிகடியாரிலங்கை உலகைஈரடியால் *
நடந்தநம்பிநாமம்சொல்லில் நமோநாராயணமே. (2)
1539 விடந்தானுடையஅரவம்வெருவச் செருவில்முனநாள் * முன்
தடந்தாமரைநீர்ப்பொய்கைபுக்கு மிக்கதாடாளன் *
இடந்தான்வையம்கேழலாகி உலகைஈரடியால் *
நடந்தானுடையநாமம்சொல்லில் நமோநாராயணமே.
1540 பூணாதனலும்தறுகண்வேழம்மறுக * வளைமருப்பை
பேணான்வாங்கி அமுதம்கொண்டபெருமான்திருமார்வன் *
பாணாவண்டுமுரலும்கூந்தல் ஆய்ச்சிதயிர்வெண்ணெய் *
நாணாதுஉண்டான்நாமம்சொல்லில் நமோநாராயணமே.
1541 கல்லார்மதிள்சூழ்கச்சிநகருள்நச்சிப், பாடகத்துள் *
எல்லாவுலகும்வணங்க இருந்தஅம்மான் * இலங்கைக்கோன்
வல்லாளாகம் வில்லால்முனிந்தஎந்தை * விபீடணற்கு
நல்லானுடையநாமம்சொல்லில் நமோநாராயணமே.
1542 குடையாவரையால் நிரைமுன்காத்தபெருமான் * மருவாத
விடைதானேழும்வென்றான் கோவல்நின்றான் * தென்னிலங்கை
அடையாஅரக்கர்வீயப்பொருது மேவிவெங்கூற்றம் *
நடையாவுண்ணக்கண்டான்நாமம் நமோநாராயணமே.
1543 கானஎண்கும்குரங்கும் முசுவும்படையா * அடலரக்கர்
மானமழித்துநின்ற வென்றியம்மான் * எனக்குஎன்றும்
தேனும்பாலும்அமுதுமாய திருமால்திருநாமம் *
நானும்சொன்னேன்நமரும்உரைமின் நமோநாராயணமே.
1544 நின்றவரையும்கிடந்தகடலும் திசையும்இருநிலனும் *
ஒன்றும்ஒழியாவண்ணம் எண்ணிநின்றஅம்மானார் *
குன்றுகுடையாஎடுத்த அடிகளுடையதிருநாமம் *
நன்றுகாண்மின்தொண்டீர்! சொன்னேன் நமோநாராயணமே.
1545 கடுங்கால்மாரிகல்லேபொழிய அல்லேஎமக்கென்று
படுங்கால் * நீயேசரணென்று ஆயரஞ்ச, அஞ்சாமுன் *
நெடுங்காற்குன்றம்குடையொன்றேந்தி நிரையைச் சிரமத்தால் *
நடுங்காவண்ணம்காத்தான்நாமம் நமோநாராயணமே.
1546 பொங்குபுணரிக்கடல்சூழாடை நிலமாமகள்மலர்மா
மங்கை * பிரமன்சிவன்இந்திரன் வானவர்நாயகராய *
எங்களடிகள் இமையோர்தலைவருடையதிருநாமம் *
நங்கள்வினைகள்தவிரவுரைமின் நமோநாராயணமே.
1547 வாவித்தடம்சூழ்மணிமுத்தாற்று நறையூர்நெடுமாலை *
நாவில்பரவிநெஞ்சில்கொண்டு நம்பிநாமத்தை *
காவித்தடங்கண்மடவார்கேள்வன் கலியனொலிமாலை *
மேவிச்சொல்லவல்லார்பாவம் நில்லாவீயுமே. (2)