Your browser does not support the audio element.
audio
1448 வண்டுணு நறுமலரிண்டைகொண்டு
பண்டைநம்வினைகெடவென்று * அடிமேல்
தொண்டரும்அமரரும்பணியநின்று அங்கு
அண்டமொடுஅகலிடம்அளந்தவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே! (2)
1449 அண்ணல்செய்துஅலைகடல்கடைந்து அதனுள்
கண்ணுதல்நஞ்சுண்ணக்கண்டவனே! *
விண்ணவரமுதுண அமுதில்வரும்
பெண்ணமுதுண்டஎம்பெருமானே! *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1450 குழல்நிறவண்ண! நின்கூறுகொண்ட
தழல்நிறவண்ணன்நண்ணார்நகரம்
விழ * நனிமலைசிலைவளைவுசெய்து அங்கு
அழல்நிறஅம்பதுவானவனே! *
1451 நிலவொடுவெயில்நிலவிருசுடரும்
உலகமும்உயிரும் உண்டுஒருகால் *
கலைதருகுழவியின்உருவினையாய்
அலைகடல்ஆலிலைவளர்ந்தவனே! *
1452 பாரெழுகடலெழுமலையெழுமாய்ச்
சீர்கெழும்இவ்வுலகேழுமெல்லாம் *
ஆர்கெழுவயிற்றினில்அடக்கிநின்று அங்கு
ஒரெழுத்துஓருருவானவனே! *
1453 கார்கெழுகடல்களும்மலைகளுமாய்
ஏர்கெழும்உலகமுமாகி *
முதலார்களும்அறிவருநிலையினையாய்ச்
சீர்கெழுநான்மறையானவனே! *
1454 உருக்குறுநறுநெய்கொண்டுஆரழலில்
இறுக்குறும்அந்தணர்சந்தியின்வாய் *
பெருக்கமொடுஅமரர்களமரநல்கும்
இருக்கினில்இன்னிசையானவனே! *
1455 காதல்செய்துஇளையவர்கலவிதரும்
வேதனைவினையதுவெருவுதலாம் *
ஆதலின்உனதடியணுகுவன்நான்.
போதலார்நெடுமுடிப்புண்ணியனே! *
1456 சாதலும்பிறத்தலும்என்றிவற்றை
காதல்செய்யாதுஉனகழலடைந்தேன் *
ஓதல்செய்நான்மறையாகி உம்பர்
ஆதல்செய்மூவுருவானவனே! *
1457 பூமரு பொழிலணி விண்ணகர்மேல் *
காமருசீர்க் கலிகன்றிசொன்ன *
பாமருதமிழிவை பாடவல்லார் *
வாமனனடியிணை மருவுவரே. (2)