PT 4.1.5

உலகேழு முண்டவன் உறைவிடம் இது

1252 அண்டமும்இவ்வலைகடலும் அவனிகளும்குலவரையும் *
உண்டபிரான்உறையுமிடம், ஓளிமணிசந்தகில்கனகம் *
தெண்திரைகள்வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல் *
திண்திறலார்பயில்நாங்கைத்திருத்தேவனார்தொகையே.
PT.4.1.5
1252 aṇṭamum iv alai kaṭalum * avaṉikal̤um kula varaiyum *
uṇṭa pirāṉ uṟaiyum iṭam * ŏl̤i maṇi cantu akil kaṉakam **
tĕṇ tiraikal̤ varat tiraṭṭum * tikazh maṇṇit tĕṉ karaimel *
tiṇ tiṟalār payil-nāṅkait * tiruttevaṉārtŏkaiye-5

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1252. Our highest lord who swallowed the sky, the oceans with rolling waves, all the seven worlds and the ancient hills stays in Thiruthevanārthohai in Nāngur where the clear waves of the Mannai river bring shining diamonds and fragrant akil and leave them on its southern bank where heroic people live.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டமும் ஆகாசமும்; இவ் அலை கடலும் அலை கடலும்; அவனிகளும் தீவுகளும்; குலவரையும் மலைகளும் ஆகிய அனைத்தையும்; உண்ட பிரளயகாலத்தில் வயிற்றில் கொண்ட; பிரான் எம்பெருமான்; உரையும் இடம் இருக்குமிடம்; ஓளி மணி ஒளிபொருந்திய ரத்நங்களையும்; சந்து அகில் சந்தன அகில் மரங்களையும்; கனகம் பொன்னையும்; தெண் திரைகள் தெளிந்த அலைகளின்; வர வழியே வரும்படியாக; திரட்டும் கூட்டம் கூட்டமாக குவியும்; திகழ் மண்ணி தெளிந்த மண்ணி ஆற்றின்; தென் கரைமேல் தென் கரைமேல்; திண் திறலார் மிக்க பலசாலிகள்; பயில் நாங்கை வாழும் திருநாங்கூரிலுள்ள; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
aṇdamum sky; alai waves agitating; ikkadalum these oceans; avanigal̤um the islands (such as jambūdhvīpam); kula varaiyum anchoring mountains (such as himavān); uṇda mercifully consumed (these during pral̤ayam); pirān benefactor; uṛaiyum idam the abode where he resides; ol̤i having radiance; maṇi precious gems; sandhu sandalwood trees; agil dhĕvadhāru (eagle wood) logs; kanagam gold; thel̤ pure, flawless; thiraigal̤ waves-; vara in the arrival; thirattum bringing and making a heap of collections; thigazh shining; maṇṇi river maṇṇi-s; then karai mĕl on the southern banks; thiṇ firm; thiṛalār those who are strong; payil densely living; nāngai in thirunāngūr; thiruththĕvanār thogai thiruththĕvanār thogai .