PT 4.1.6

ஆலிலையில் பள்ளி கொண்டவன் இடம் இது

1253 ஞாலமெல்லாம்அமுதுசெய்து நான்மறையும் தொடராத *
பாலகனாய்ஆலிலையில் பள்ளிகொள்ளும்பரமனிடம் *
சாலிவளம்பெருகிவரும் தடமண்ணித்தென்கரைமேல் *
சேலுகளும்வயல்நாங்கைத் திருத்தேவனார்தொகையே.
PT.4.1.6
1253 ñālam ĕllām amutu cĕytu * nāṉmaṟaiyum tŏṭarāta *
pālakaṉ āy āl ilaiyil * pal̤l̤i kŏl̤l̤um paramaṉ iṭam **
cāli val̤am pĕruki varum * taṭa maṇṇit tĕṉ karaimel *
cel ukal̤um vayal-nāṅkait * tiruttevaṉārtŏkaiye-6

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1253. Our highest lord who swallowed the whole world and lay on a banyan leaf when he was a baby and whom the Vedās could not follow and find stays in Thiruthevanārthohai in Nāngai where fish frolic in the large Mannai river and paddy fields flourish on its southern banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான்மறையும் நான்கு வேதங்களாலும்; தொடராத அணுக முடையாத பெருமை உடையவனும்; பாலகன் ஆய் இளங்குழந்தையாய்; ஞாலம் எல்லாம் பூமிமுழுவதையும்; அமுது செய்து விழுங்கி; ஆலிலையில் ஆலந்தளிரில்; பள்ளி கொள்ளும் பள்ளி கொள்ளும்; பரமனிடம் எம்பெருமான் இருக்குமிடம்; தடமண்ணித் தெளிந்த மண்ணி ஆற்றின்; தென் கரைமேல் தென் கரைமேல்; சாலி வளம் செந்நெல் பயிர்களின்; பெருகி வரும் செழிப்பானது பெருகி வரும்; சேல் உகளும் சேல் மீன்கள் துள்ளி விளையாடும்; வயல் நாங்கை வயல்களையுடைய திருநாங்கூரில்; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
nāl maṛaiyum vĕdhams which are best among the pramāṇams [authentic texts] and are of four types; thodarādha having greatness of not being able to be aptly spoken by; pālaganāy being a young child; gyālam ellām the whole world; amudhu seydhu swallowed; āl ilaiyil in a tender banyan leaf; pal̤l̤i kol̤l̤um mercifully resting; paraman supreme lord; idam the abode where he eternally resides; thadam vast; maṇṇith then karai mĕl on the southern banks of maṇṇi river; sāli of the reddish paddy crops; val̤am richness; perugi varum growing; sĕl sĕl (carp) fish; ugal̤um jumping; vayal having fertile fields; nāngai in thirunāngūr; thiruththĕvanār thogai dhivyadhĕṣam named thiruththĕvanār thogai.