PT 3.9.5

இராவணனைக் கொன்றவன் கோயில் இதுதான்

1232 மின்னனையநுண்மருங்குல்மெல்லியற்கா இலங்கை
வேந்தன்முடியொருபதும் தோளிருபதும் போயுதிர *
தன்னிகரில்சிலைவளைத்து அன்றுஇலங்கைபொடி செய்த
தடந்தோளன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
செந்நெலொடுசெங்கமலம் சேல்கயல்கள் வாளை
செங்கழுநீரொடுமிடைந்துகழனிதிகழ்ந்துஎங்கும் *
மன்னுபுகழ்வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
PT.3.9.5
1232
minnanaiya nNuNmarungkul, melliyaRkāy *
ilangkai vEnNdhan mudi_orupadhum, thOLirubadhum pOy_udhira *
thannNigaril silaivaLaitthu, anRu_ilangkai podiseydha *
thadanNdhOLan magizhnNdhinidhu, maruviyuRaikOyil,
senNnNelodu sengkamalam, sElkayalgaL vāLai *
sengkazhunNeerodu, midainNdhukazhani thigazhnNdhengkum *
mannupugazh vEdhiyargaL, maliveydhu nNāngkoor *
vaigunNdha viNNagaram, vaNangkumadanNeNYchE! 3.9.5

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1232. Our lord with wide arms who went to Lankā with his matchless bow, smashed it to pieces and fought with Rāvana, its king, making his ten heads and twenty arms fall to the earth and brought back his wife, the gentle Sita with a waist as thin as lightning stays happily in Vaikundavinnagaram, the temple in Nāngur where good paddy, red lotuses, vālai fish and beautiful kazhuneer flowers flourish all together in the fields and where many Vediyars live, reciters of the Vedās with everlasting fame. O innocent heart, let us go there and worship him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொரு சமயம்; மின் அனைய நுண் மின்னல் போன்று நுட்பமான; மருங்குல் இடையுடைய; மெல்லியற்கா மெலிந்த ஸீதைக்காக; இலங்கை வேந்தன் இலங்கை அரசன் ராவணனின்; முடி ஒருபதும் பத்துக் தலைகளும்; தோள் இருபதும் இருபது தோள்களும்; போய் உதிர உதிரும்படி; தன் நிகரில் ஒப்பற்ற தனது; சிலை வளைத்து வில்லை வளைத்து; இலங்கை இலங்கையை; பொடி செய்த பொடி செய்த; தடந் தோளன் மகாவீரன்; மகிழ்ந்து இனிது மகிழ்ந்து இனிது; மருவி உறை கோயில் அவன் உறையுமிடம்; செந்நெலொடு செந்நெல்லும்; செங்கமலம் செந்தாமரையும்; சேல் கயல்கள் சேல் கயல்கள்; வாளை வாளை போன்ற மீன்கள்; செங்கழுநீரொடு செங்கழு நீர்பூக்களும்; மிடைந்து சேர்ந்து கொண்டு; கழனி எங்கும் கழனிகளெல்லாம்; திகழ்ந்து பிரகாசிக்கும்; மன்னு புகழ் வேதியர்கள் கீர்த்தியுள்ள வைதிகர்கள்; மலிவு எய்தும் நாங்கூர் நிறைந்த திருநாங்கூரிலிருக்கும்; வைகுந்தவிண்ணகரம் வைகுந்தவிண்ணகரம்; வணங்கு மட நெஞ்சே! வணங்கு மட நெஞ்சே!
anRu At that time; min anaiya matching a lightning; nuN marungul slender waist; melliyaRkA for pirAtti who is tender-natured; ilangai vEndhan rAvaNa, who is the leader of lankA, his; mudi oru padhum ten heads which have shining crowns; thOL irupadhum twenty arms; pOy udhira to have them break into hundreds of pieces; nigar il matchless; than silai vaLaiththu launching his tall bow, kOdhaNdam; ilangai lankA; podi seydha one who turned [it] to dust; thadam thOLan mighty shouldered chakravarthith thirumagan; magizhndhu with joy; inidhu to be sweet for the devotees; maruvi uRai kOyil eternally residing without any other expectation; sen nelodu red paddy crops; sem kamalam reddish lotus flowers; sEl vayalgaL vALai sEl fish, kayal fish and vALai fish; sengazhunIrodu with sengazhunIr flowers; midaindhu together; kazhani engum in all the fertile fields; thigazhndhu shining; mannu pugazh having eternal fame; vEdhiyargaL brAhmaNas; malivu eydhum having [them] densely residing in all the streets; nAngUr in thirunAngUr; vaigundha viNNagaram vaigundha viNNagaram; vaNangu worship; mada nenjE Oh humble heart!