PT 3.9.4

இராமன் தங்குமிடம் வைகுந்த விண்ணகரம்

1231 கலையிலங்கும் அகலல்குல் அரக்கர்க்குலக்கொடியைக்
காதொடுமூக்குடன்அரியக்கதறிஅவளோடி *
தலையில்அங்கைவைத்து மலையிலங்கைபுகச்செய்த
தடந்தோளன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
சிலையிலங்கு மணிமாடத்துச்சிமிசைச்சூலம்
செழுங்கொண்டலகடிரியச் சொரிந்த செழுமுத்தம் *
மலையிலங்குமாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
PT.3.9.4
1231 kalai ilaṅkum akal alkul arakkar kulak kŏṭiyaik *
kātŏṭu mūkku uṭaṉ ariyak kataṟi aval̤ oṭi *
talaiyil aṅ kai vaittu malai ilaṅkai pukac cĕyta *
taṭan tol̤aṉ makizhntu iṉitu maruvi uṟai koyil **
cilai ilaṅku maṇi māṭattu uccimicaic cūlam *
cĕzhuṅ kŏṇṭal akaṭu iriyac cŏrinta cĕzhu muttam *
malai ilaṅku māl̤ikaimel malivu ĕytum nāṅkūr *
vaikuntaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-4

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1231. As Rāma, our lord with his strong arms cut off the nose and ears of Surpanaha, the vine-like daughter of the Rākshasa family with a waist ornamented with precious jewels, and made her scream, holding her beautiful hands to her head as she ran to Lankā and cried to her brother. He stays happily in Vaikundavinnagaram, the temple in Nāngur where tridents studded with jewels rise over the beautiful patios splitting the bottoms of the clouds and precious pearls spill from them and fall on the large beautiful palaces that look like shining hills. O innocent heart, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலை இலங்கும் மேகலை விளங்கும்; அகல் அல்குல் அரக்கர் அகன்ற இடையுடைய அரக்கர்; குல குலப் பெண்ணான; கொடியை கொடியை ஒத்த சூர்பணகை; காதொடு மூக்குடன் காதையும் மூக்கையும்; அரிய அறுக்க; கதறி அவள் ஓடி அவள் வாய்விட்டு கதறி ஓடி; தலையில் அம் கை வைத்து தன் தலைமேலே கை வைத்து; மலை இலங்கை மலைமேலுள்ள இலங்கையில்; புகச் செய்த புகும்படி செய்த; தடந் தோளன் வலிமை மிக்க தோள்களையுடைய; மகிழ்ந்து இனிது எம்பெருமான் மருவி உறை கோயில்; சிலை இலங்கு ஒளிமயமான; மணி மாடத்து ரத்தனங்களிழைத்த; உச்சிமிசை மாளிகைகளின் சிகரத்திலிருக்கும்; சூலம் சூலங்கள்; செழுங் கொண்டல் செழுமையான மேகங்களினுடைய; அகடு இரிய கீழ் வயிற்றைப் பிளக்க; சொரிந்த அதனால் பெய்த; செழு முத்தம் அழகிய முத்துக்கள்; மலை இலங்கு மலைப்போலுள்ள; மாளிகை மேல் மாளிகை மேல்; மலிவு எய்தும் குவிந்து கிடக்கும்; நாங்கூர் திருநாகூரிலிருக்கும்; வைகுந்தவிண்ணகரம் வைகுந்தவிண்ணகரம்; வணங்கு மட நெஞ்சே! வணங்கு மட நெஞ்சே!
ilangum kalai having shining clothes; agal algul having wide thighs; arakkar kulam born in demoniac clan; kodiyai sūrpaṇakā who is having creeper like waist, her; kādhodu mūkku ear and nose; udan ariya severing at once; aval̤ she; kadhaṛi crying out loudly; thalaiyil on her head; am kai vaiththu placing her beautiful hand; ŏdi ran; malai present atop the mountain; ilangai pugach cheydha made her to enter lankā; thadam thŏl̤an chakravarthith thirumagan who has mighty shoulders; magizhndhu with joy; inidhu to be sweet for the devotees; maruvi uṛai kŏyil eternally residing without any other expectation; silai ilangu shining; maṇi mādaththu homes studded with gems; uchchi misai atop the tall roofs; sūlam tridents; sezhum koṇdal rich clouds-; agadu iriya tearing the bottom portion of their stomach; sorindha delivered; sezhu muththam beautiful pearls; malai ilangu shining like a mountain; māl̤igai mĕl atop the mansions; malivu eydhu present as heaps; nāngūr in thirunāngūr; vaigundha viṇṇagaram vaigundha viṇṇagaram; vaṇangu worship; mada nenjĕ ŏh humble heart!