PT 3.9.6

கண்ணபிரான் உறையும் கோயில் இதுதான்

1233 பெண்மைமிகுவடிவுகொடுவந்தவளைப் பெரிய
பேயினதுஉருவுகொடுமாளஉயிருண்டு *
திண்மைமிகுமருதொடு நற்சகடமிறுத்தருளும்
தேவனவன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
உண்மைமிகுமறையொடு நற்கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடையென்றுஇவற்றினொழிவில்லா * பெரிய
வண்மைமிகுமறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
PT.3.9.6
1233 pĕṇmai miku vaṭivu kŏṭu vantaval̤aip * pĕriya
peyiṉatu uruvu kŏṭu māl̤a uyir uṇṭu *
tiṇmai miku marutŏṭu nal cakaṭam iṟuttarul̤um *
tevaṉ-avaṉmakizhntu iṉitu maruvi uṟai koyil **
uṇmai miku maṟaiyŏṭu nal kalaikal̤ niṟai pŏṟaikal̤ *
utavu kŏṭai ĕṉṟu ivaṟṟiṉ ŏzhivu illā * pĕriya
vaṇmai miku maṟaiyavarkal̤ malivu ĕytum nāṅkūr *
vaikuntaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-6

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1233. The god of the gods who drank the milk from the breasts of the devil Putanā, when she came as a beautiful woman, destroyed the two Asurans when they came as Marudu trees and killed Sakatasuran when he came as a cart, stays happily in Vaikundavinnagaram, the temple in Nāngur where many generous Vediyars live, reciters of the Vedās and skilled in all the arts. O innocent heart, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெண்மை மிகு உத்தம ஸ்தீரியின்; வடிவு கொடு வடிவெடுத்து; வந்தவளை பெரிய பேயினது வந்த பூதனையானவள்; உருவு கொடு தன் கொடிய பேய் வடிவத்துடனே; மாள இறக்கும் படியாக; உயிர் உண்டு உயிரை வாங்கியவனும்; திண்மை மிகு திடமாக கிடந்த; மருதொடு மருத மரத்தையும்; நல் சகடம் கொடிய சகடத்தையும்; இறுத்தருளும் முறித்தவனுமான; தேவனவன் எம்பெருமான்; மகிழ்ந்து இனிது மகிழ்ந்து இனிது; மருவி உறை கோயில் அவன் உறையுமிடம்; உண்மை மிகு உண்மை பேசும்; மறையொடு வேதங்களையும்; நல் கலைகள் இதிஹாஸ புராணங்களையும்; நிறை பொறைகள் நிறைந்த நற்குணங்களும்; உதவு உதவும் மனமும்; கொடை என்று கொடைபோன்ற குணங்களும்; இவற்றின் இவற்றை; ஒழிவு இல்லா பெரிய எப்போதும் உடையவர்களாய்; வண்மை மிகு மறையவர்கள் சிறந்த வைதிகர்கள்; மலிவு எய்து நாங்கூர் நிறைந்த திருநாங்கூரிலிருக்கும்; வைகுந்தவிண்ணகரம் வைகுந்தவிண்ணகரம்; வணங்கு மட நெஞ்சே! வணங்கு மட நெஞ்சே!
peṇmai migu vadivu kodu assuming the form of the best woman; vandhaval̤ai pūthanā, who came to deceive; periya pĕyinadhu uruvu kodu to have her original huge demoniac form; māl̤a to die; uyir uṇdu took her life; thiṇmai migu having great strength; marudhodu marudha tree; naṛchagadam the wheel which has the ability to finish the task which was started; iṛuththu arul̤um one who broke; dhĕvanavan krishṇa; magizhndhu with joy; inidhu to be sweet for the devotees; maruvi uṛai kŏyil eternally residing without any other expectation; uṇmai migu maṛaiyodu vĕdhams which speak the truth as it is; naṛ kalaigal̤ (their) good ancillary subjects; niṛai complete qualities (acquired by their familiarity); poṛaigal̤ tolerance etc; udhavu kodai enṛu ivaṝin the generosity of helping, once asked – all such aspects; ozhivillā those who are not leaving (having them at all times); periya vaṇmai magnanimity (i.e. āthma samarpaṇam – submitting oneself); migu filled; maṛaiyavargal̤ brāhmaṇas; malivu eydhum residing densely; nāngūr in thirunāngūr; vaigundha viṇṇagaram vaigundha viṇṇagaram; vaṇangu worship; mada nenjĕ ŏh humble heart!