PT 3.9.2

நரசிங்கன் உறையும் இடம் வைகுந்த விண்ணகரம்

1229 திண்ணியதோரரியுருவாய்த்திசையனைத்தும் நடுங்கத்
தேவரொடுதானவர்கள் திசைப்ப * இரணியனை
நண்ணிஅவன்மார்வகலத்து உகிர்மடுத்தநாதன்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
எண்ணில்மிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையும்
ஏழிசையும்கேள்விகளும் இயன்ற பெருங்குணத்தோர் *
மண்ணில்மிகுமறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!
PT.3.9.2
1229 tiṇṇiyatu or ari uruvāyt ticai aṉaittum naṭuṅkat *
tevarŏṭu tāṉavarkal̤ ticaippa * iraṇiyaṉai
naṇṇi avaṉ mārvu akalattu ukir maṭutta nātaṉ *
nāl̤toṟum makizhntu iṉitu maruvi uṟai koyil **
ĕṇ il miku pĕruñ cĕlvattu ĕzhil vil̤aṅku maṟaiyum *
ezh icaiyum kel̤vikal̤um iyaṉṟa pĕruṅ kuṇattor *
maṇṇil miku maṟaiyavarkal̤ malivu ĕytum nāṅkūr *
vaikuntaviṇṇakaram vaṇaṅku maṭa nĕñce-2

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1229. The lord who took the form of a strong lion and split open the chest of Hiranyan with his claws, terrifying the gods and the Asurans as they looked on and all the directions trembled, stays happily every day in Vaikundavinnagaram, the temple in Nāngur where good-natured Vediyars, reciters of the divine Vedās and the seven kinds of music live performing abundant sacrifices. O innocent heart, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திசை அனைத்தும் எல்லாத் திசைகளிலுள்ளவர்களும்; நடுங்க நடுங்க; தேவரொடு தானவர்கள் தேவரும் அசுரரும்; திசைப்ப கலங்க; திண்ணியது ஓர் வலிய ஒப்பற்ற; அரி உருவாய் நரசிம்ம ரூபியாய்; இரணியனை நண்ணி இரணியனை அணுகி; அவன் அகலத்து மார்வு அவனுடைய அகன்ற மார்பை; உகிர் நகங்களை; மடுத்த ஊன்ற வைத்து பிளந்த; நாதன் பெருமான்; நாள்தோறும் மகிழ்ந்து நாள்தோறும் மகிழ்ந்து; இனிது மருவி இனிது மருவி; உறை கோயில் உறையும் கோயில்; எண்ணில் மிகு எண்ணிலடங்காத; பெரும் செல்வத்து பெரும் செல்வமும்; எழில் விளங்கு மறையும் அழகு மிகுந்த வேதங்களும்; ஏழ் இசையும் ஸப்த ஸ்வரங்களும்; கேள்விகளும் இயன்ற அவற்றின் அர்த்தங்களை அறிந்த; பெரும் மேன்மை பொருந்திய; குணத்தோர் குணமுடையவர்களும்; மண்ணில் மிகு உலகில் சிறப்புப் பெற்ற; மறையவர்கள் வைதிகர்கள்; மலிவு எய்தும் நாங்கூர் நிறைந்த திருநாங்கூரிலிருக்கும்; வைகுந்தவிண்ணகரம் வைகுந்த விண்ணகரம் அடைந்து; வணங்கு மட நெஞ்சே! வணங்கு மட நெஞ்சே!
thisai anaiththum those who are in all directions; nadunga to fear; dhĕvarodu dhānavargal̤ dhĕvathās (noble celestials) and dhānavas (demons); thisaippa to be bewildered; thiṇṇiyadhu ŏr strong and distinguished; ari uruvāy in the form of narasimha; iraṇiyanai hiraṇyāsuran; naṇṇi approached; avan his; mārvu agalaththu wide chest; ugir maduththa placed the nail and tore; nādhan lord; nādŏṛum everyday; magizhndhu with joy; inidhu to be sweet for the devotees; maruvi uṛai kŏyil eternally residing without any other expectation; eṇṇil migu countless; perum selvaththu having great wealth; ezhil vil̤angu radiantly beautiful; maṛaiyum vĕdhams; ĕzhu isaiyum seven rāgas; kĕl̤vigal̤um hearing the meanings (of such vĕdhams etc); iyanṛa complete (filled with); perum guṇaththŏr those who are with noble qualities; maṇṇil migu best among the bhūsuras (noble personalities on the earth); maṛaiyavargal̤ brāhmaṇas; malivu eydhum residing densely; nāngūr in thirunāngūr; vaigundha viṇṇagaram vaigundha viṇṇagaram; vaṇangu worship; mada nenjĕ ŏh humble heart!