சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-
மலி-திடமான பரகாலன்-சத்ரு மிருத்யு