The Abode of Narasiṁha is Vaikunta Viṇṇakaram
நரசிங்கன் உறையும் இடம் வைகுந்த விண்ணகரம்
1229 திண்ணியதோரரியுருவாய்த்திசையனைத்தும் நடுங்கத்
தேவரொடுதானவர்கள் திசைப்ப * இரணியனை
நண்ணிஅவன்மார்வகலத்து உகிர்மடுத்தநாதன்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
எண்ணில்மிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையும்
ஏழிசையும்கேள்விகளும் இயன்ற பெருங்குணத்தோர் *
மண்ணில்மிகுமறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!