PT 3.8.1

மனமே! மணிமாடக் கோயிலை வணங்கு

1218 நந்தாவிளக்கே! அளத்தற்கு அரியாய்!
நரநாரணனே! கருமாமுகில் போல்
எந்தாய்! * எமக்கே அருளாயெனநின்று
இமையோர் பரவும் இடம் * எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே
களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து *
மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே! (2)
PT.3.8.1
1218 ## nantā vil̤akke al̤attaṟku ariyāy *
nara nāraṇaṉe karu mā mukilpol
ĕntāy * ĕmakke arul̤āy ĕṉa niṉṟu *
imaiyor paravum iṭam ** ĕt ticaiyum
kantāram am teṉ icai pāṭa māṭe *
kal̤i vaṇṭu mizhaṟṟa nizhal tutaintu *
mantāram niṉṟu maṇam malkum nāṅkūr *
maṇimāṭakkoyil-vaṇaṅku ĕṉ maṉaṉe-1

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1218. The gods come from the sky and worship the lord saying, “You are everlasting light. No one can measure your power. You are Nārāyanān who took the form of a man-lion and split open the chest of Hiranyan. O father whose body has the color of a dark cloud, give us your grace. ” He is god of Manimādakkoyil in Thirunāngur filled with groves where happy bees swarm everywhere singing the kandāram rāgam and pārijādam trees grow thick, giving shade and spreading fragrance. O my heart, go to worship him in the temple in Nāngur where he stays. 1st line refers to satyam jnanam anantam Brahmā (Tait. 2. 1. 1)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நந்தா நித்யமான ஸ்வயம் ப்ரகாசமான; விளக்கே! ஞான ஸ்வரூபமானவனே!; அளத்தற்கு அரியாய்! அளவிட முடியாதவனே!; நர நாரணனே! நர நாரயண அவதாரம் செய்தவனே!; கரு மா முகில் போல் கறுத்த பெருத்த மேகம் போன்ற; எந்தாய்! எமக்கே எம்பெருமானே! எங்களுக்கே; அருளாய் என அருள் செய்ய வேணும் என்று; இமையோர் தேவர்கள்; நின்று பரவும் பூமியில் வந்து நின்று; இடம் துதிசெய்யுமிடமானதும்; அம் தேன் அழகிய வண்டுகள்; எத்திசையும் எல்லா இடங்களிலும்; கந்தாரம் இசை பாட ரீங்காரம் செய்ய; களி வண்டு தேனருந்திய வண்டுகள்; மாடே மிழற்ற களித்து பாடி ஆட; மந்தாரம் நின்று பாரிஜாத மரங்கள்; நிழல் துதைந்து நிழல் தர நெருங்கி நின்று; மணம் மல்கும் நாங்கூர் மணம் மிக்க திருநாங்கூரிலுள்ள; மணிமாடக்கோயில் மணிமாடக் கோயில் சென்று; வணங்கு என் மனனே! வணங்கு என் மனமே!
nandhā vil̤akkĕ ŏh you who are having the true nature of being eternal and self-illuminating knowledge!; al̤aththaṛku ariyāy ŏh you who are incomprehensible!; nara nāraṇanĕ ŏh you who incarnated as nara and nārāyaṇa!; karu mā mugil pŏl endhāy ŏh you, my lord, who are having divine form which matches a dark, great cloud!; emakkĕ ḫor us who are favourable and have no other refuge than you; arul̤ay ena saying -you should mercifully give your grace-; imaiyŏr dhĕvathās; ninṛu coming and standing on earth; paravum idam being the abode where they will sing sthŏthrams (hymns in praīse)etc and surrender; am thĕn beautiful beetles; eththisaiyum in all directions; kandhāram isai pāda to sing rāgas like dhĕva gāndhāri etc; kal̤i vaṇdu beetles who have drunk honey; mādĕ in the surroundings; mizhaṝa to hum; nizhal thudhaindhu giving shade to those beetles; mandhāram ninṛu maṇam malgum mandhāra trees blossoming in all seasons and spreading abundant fragrance; nāngūr in thirunāngūr; maṇi mādak kŏyil thirumaṇimādak kŏyil; en mananĕ ŏh my heart!; vaṇangu surrender