PT 3.8.2

கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் இடம் திருநாங்கூர்

1219 முதலைத்தனிமாமுரண்தீரஅன்று
முதுநீர்த்தடத்துச்செங்கண்வேழம்உய்ய *
விதலைத்தலைச்சென்றுஅதற்கே உதவி
வினைதீர்த்தஅம்மானிடம் * விண்ணணவும்
பதலைக்கபோதத்தொளிமாடநெற்றிப்
பவளக்கொழுங்கால்பைங்கால்புறவம் *
மதலைத்தலைமென்பெடைகூடுநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!
PT.3.8.2
1219 mutalait taṉi mā muraṇ tīra aṉṟu *
mutu nīrt taṭac cĕṅ kaṇ vezham uyya *
vitalaittalaic cĕṉṟu ataṟke utavi *
viṉai tīrtta ammāṉ iṭam ** viṇ aṇavum
patalaikka potattu ŏl̤i māṭa nĕṟṟip *
paval̤ak kŏzhuṅ kāla paiṅ kāl puṟavam *
matalait talai mĕṉ pĕṭai kūṭum nāṅkūr *
maṇimāṭakkoyil-vaṇaṅku ĕṉ maṉaṉe-2

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1219. Our father who took away the suffering of the trembling elephant Gajendra when a crocodile in a deep pond caught him stays in Manimādakkoyil in Thirunāngur filled with shining palaces and pillars that touch the sky, where the male doves with beautiful coral-like legs love their gentle mates with soft fledglings. O heart, worship him in that temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு; முது நீர் நீரையுடைய; தடத்து பொய்கைக் கரையிலே; முதலைத் தனிமா முதலையின்; முரண் தீர மிடுக்கு அழியும்படியாக; செங் கண் சிவந்த கண்களுடைய; வேழம் உய்ய யானை உயிர் வாழ; விதலைத்தலை யானையின் துயரம் தீர; சென்று அங்கு சென்று; அதற்கே உதவி அந்த யானைக்கு உதவி செய்து; வினை தீர்த்த அதன் துயரைத் தீர்த்த; அம்மான் இடம் பெருமான் இருக்குமிடம்; விண் அணவும் விண்ணுலக அளவு; பதலை கலசங்களையும்; கபோதத்து புறாக்கள் வாழும் இடங்களை உடைய; ஒளி மாட நெற்றி ஒளியுள்ள மாடங்களின் மேல்; பவளக் கொழுங் கால பவழத்தூண்போன்ற; பைங்கால் புறவம் காலையுடைய புறாக்கள்; மதலைத் தலை மென் தூண்களின் மேல்; பெடை கூடு பெடையோடு கூடியிருக்கும் இடமான; நாங்கூர் திரு நாங்கூரிலுள்ள; மணிமாடக்கோயில் மணிமாடக் கோயிலில் சென்று; வணங்கு என் மனனே! வணங்கு என் மனமே!
anṛu āt that time; mudhu nīr having ancient water; thadaththu in the pond (grabbing the elephant-s foot); thani mā mudhalai the matchless big crocodile-s; muraṇ thīra to eliminate the endless strength; sem kaṇ vĕzham the elephant which has reddish eyes due to anger; uyya to be freed; vidhalaith thalaich chenṛu arriving during the sorrowful times; adhaṛkĕ udhavi helping that elephant; vinai thīrththa one who eliminated its sorrow; ammān sarvĕṣvaran-s; idam being the abode; viṇ aṇavum touching the heaven; padhalai kalaṣas (pot like structures); kabŏdham pigeon holes; ol̤i having the shine of gems which were embossed; māda neṝi on the balconies; paval̤ak kozhum kāla like the well-grown feet of corals; paingāl puṛavam pigeon which is having greenish feet; madhalaith thalai atop the short pillars; men pedai with the female pigeon which is tender by nature; kūdum residing together; nāngūr in thirunāngūr; maṇi mādak kŏyil thirumaṇimādak kŏyil; en mananĕ ŏh my heart!; vaṇangu surrender