Chapter 4

Seerkāzi SriRamavinnaharam - (ஒரு குறள்)

திருக்காழிச் சீராமவிண்ணகரம்
Seerkāzi SriRamavinnaharam - (ஒரு குறள்)
Introduction & Details
Recitation
Translation

PT 3.4.2

1179 நான்முகன்நாள் மிகைத்தருக்கை இருக்குவாய்மை

நலமிகுசீர்உரோமசனால் நவிற்றி * நக்கன்

ஊன்முகமார்தலையோட்டூண்ஒழித்தஎந்தை

ஒளிமலர்ச்சேவடியணைவீர்! * உழுசேயோடச்

சூல்முகமார்வளையளைவாய்உகுத்தமுத்தைத்

தொல்குருகுசினையென்னச்சூழ்ந்தியங்க * எங்கும்

தேன்முகமார்கமலவயல்சேல்பாய் காழிச்

சீராமவிண்ணகரேசேர்மினீரே.

PT 3.4.3

1180 வையணைந்தநுதிக்கோட்டுவராகமொன்றாய்

மண்ணெல்லாம்இடந்தெடுத்துமதங்கள்செய்து *

நெய்யணைந்ததிகிரியினால்வாணன்திண்தோள்

நேர்ந்தவந்தாளணைகிற்பீர்! * நெய்தலோடு

மையணைந்தகுவளைகள் தம்கண்களென்றும்

மலர்க்குமுதம்வாயென்றும்கடைசிமார்கள் *

செய்யணைந்துகளைகளையாதேறும் காழிச்

சீராமவிண்ணகரேசேர்மினீரே.

PT 3.4.4

1181 பஞ்சியல்மெல்லடிப்பின்னைதிறத்து முன்னாள்

பாய்விடைகளேழடர்த்து, பொன்னன்பைம்பூண்

நெஞ்சிடந்துகுருதியுகஉகிர்வேலாண்ட

நின்மலன்தாளணைகிற்பீர்! * நீலமாலைத்

தஞ்சுடைய இருள்தழைப்பத் தரளம்ஆங்கே

தண்மதியின்நிலாக்காட்ட, பவளந்தன்னால் *

செஞ்சுடர்வெயில்விரிக்கும்அழகார் காழிச்

சீராமவிண்ணகரேசேர்மினீரே.

PT 3.4.6

1183 பைங்கண்விறல்செம்முகத்துவாலிமாளப்

படர்வனத்துக்கவந்தனொடும், படையார்திண்கை *

வெங்கண்விறல்விராதனுகவிற்குனித்த

விண்ணவர்க்கோன்தாளணைவீர்! * வெற்புப்போலும்

துங்கமுகமாளிகைமேல்ஆயங்கூறும்

துடியிடையார்முகக்கமலச்சோதிதன்னால் *

திங்கள்முகம்பனிபடைக்கும்அழகார் காழிச்

சீராமவிண்ணகரேசேர்மினீரே.

PT 3.4.7

1184 பொருவில்வலம்புரியரக்கன்முடிகள்பத்தும்

புற்றுமறிந்தனபோலப்புவிமேல்சிந்த *

செருவில்வலம்புரிசிலைக்கைமலைத்தோள்வேந்தன்

திருவடிசேர்ந்துய்கிற்பீர்! * திரைநீர்த்தெள்கி

மருவிவலம்புரிகைதைக்கழியூடாடி

வயல்நண்ணிமழைதருநீர்தவழ்கால்மன்னி *

தெருவில்வலம்புரிதரளம்ஈனும் காழிச்

சீராமவிண்ணகரேசேர்மினீரே.

PT 3.4.8

1185 பட்டரவேரகலல்குல்பவளச்செவ்வாய்

பணைநெடுந்தோள்பிணைநெடுங்கண்பாலாம் இன்சொல் *

மட்டவிழும்குழலிக்காவானோர்காவில்

மரம்கொணர்ந்தானடியணைவீர்! * அணில்கள்தாவ

நெட்டிலையகருங்கமுகின்செங்காய்வீழ

நீள்பலவின்தாழ்சினையில்நெருங்கு * பீனத்

தெட்டபழம்சிதைந்துமதுச்சொரியும் காழிச்

சீராமவிண்ணகரேசேர்மினீரே.