You Shall Attain the Holy Feet of Tirumāl! Reach the City of Kāḻi.
திருமால் திருவடி அணைவீர்! காழிநகர் சேருங்கள்
1179 நான்முகன்நாள் மிகைத்தருக்கை இருக்குவாய்மை
நலமிகுசீர்உரோமசனால் நவிற்றி * நக்கன்
ஊன்முகமார்தலையோட்டூண்ஒழித்தஎந்தை
ஒளிமலர்ச்சேவடியணைவீர்! * உழுசேயோடச்
சூல்முகமார்வளையளைவாய்உகுத்தமுத்தைத்
தொல்குருகுசினையென்னச்சூழ்ந்தியங்க * எங்கும்
தேன்முகமார்கமலவயல்சேல்பாய் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே.