O Devotees! Reach the City of Sīkāḻi.
பக்தர்களே! சீகாழிப் பதி சேருங்கள்
1178 ஒருகுறளாய் இருநிலம்மூவடிமண்வேண்டி
உலகனைத்தும்ஈரடியாலொடுக்கி * ஒன்றும்
தருகவெனாமாவலியைச்சிறையில்வைத்த
தாடாளன்தாளணைவீர்! * தக்ககீர்த்தி
அருமறையின்திரள்நான்கும்வேள்வியைந்தும்
அங்கங்கள்அவையாறும் இசைகளேழும் *
தெருவில்மலிவிழாவளமும்சிறக்கும் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே. (2)