Reach Prosperous Kāḻi
வளம் நிறைந்த காழி சேர்க
1185 பட்டரவேரகலல்குல்பவளச்செவ்வாய்
பணைநெடுந்தோள்பிணைநெடுங்கண்பாலாம் இன்சொல் *
மட்டவிழும்குழலிக்காவானோர்காவில்
மரம்கொணர்ந்தானடியணைவீர்! * அணில்கள்தாவ
நெட்டிலையகருங்கமுகின்செங்காய்வீழ
நீள்பலவின்தாழ்சினையில்நெருங்கு * பீனத்
தெட்டபழம்சிதைந்துமதுச்சொரியும் காழிச்
சீராமவிண்ணகரேசேர்மினீரே.