Chapter 1

Thiruvayindirapuram - (இருந் தண்)

திருவயிந்திரபுரம்
Thiruvayindirapuram - (இருந் தண்)
Like Thirukkovalur, Thiruvahindrapuram is also a Divya Desam in Nadu Nadu. Here, Deivanayaka Perumal resides. The temple also has shrines for Sri Hayagriva and Sri Desika. This is the place where Sri Hayagriva appeared to Sri Vedanta Desika. It is a town that grants peace and wisdom, named after Adisesha. Ahindrapuram became Ayindrapuram and is also referred to as Ayindai.
திருக்கோவலூரைப் போல் திருவயிந்திரபுரமும் நடுநாட்டுத் திருப்பதியாகும். இங்கு தெய்வநாயகப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ ஹயக்ரீவன் சன்னதியும், ஸ்ரீதேசிகன் சன்னதியும் இங்கு இருக்கின்றன. ஸ்ரீ வேதாந்ததேசிகருக்கு ஸ்ரீ ஹயக்ரீவன் பிரத்தியட்சமான இடமும் இதுவே. அமைதியும் ஞானமும் கொடுக்கும் ஊர் இது; ஆதிசேஷனின் பெயரால் ஏற்பட்ட ஊர். அஹீந்திரபுரம் என்பது அயிந்திரபுரம் என்றாயிற்று. அயிந்தை என்றும் கூறுவதுண்டு.
Verses: 1148 to 1157
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
  • PT 3.1.1
    1148 ## இருந் தண் மா நிலம் ஏனம் அது ஆய் *
    வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி *
    கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் *
    கமல நல் மலர்த் தேறல்
    அருந்தி ** இன் இசை முரன்று எழும் அளி குலம்
    பொதுளி * அம் பொழிலூடே *
    செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு *
    திருவயிந்திரபுரமே 1 **
  • PT 3.1.2
    1149 மின்னும் ஆழி அங்கையவன் * செய்யவள்
    உறை தரு திரு மார்பன் *
    பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய *
    பரன் இடம் வரைச் சாரல் **
    பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வரப் *
    பிணி அவிழ் கமலத்து *
    தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு *
    திருவயிந்திரபுரமே 2 **
  • PT 3.1.3
    1150 வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய
    மாயவன் * அடியவர்க்கு
    மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் *
    மெய்தகு வரைச் சாரல் **
    மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய *
    முல்லை அம் கொடி ஆட *
    செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு *
    திருவயிந்திரபுரமே 3 *
  • PT 3.1.4
    1151 மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் *
    மார்பு அகம் இரு பிளவா *
    கூறு கொண்டு அவன் குலமகற்கு * இன் அருள்
    கொடுத்தவன் இடம் ** மிடைந்து
    சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை *
    விசும்பு உற மணி நீழல் *
    சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் *
    திருவயிந்திரபுரமே 4 **
  • PT 3.1.5
    1152 ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று *
    அகல் இடம் அளந்து * ஆயர்
    பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் *
    பொன் மலர் திகழ் ** வேங்கை
    கோங்கு செண்பகக் கொம்பினில் * குதிகொடு
    குரக்கினம் இரைத்து ஓடி *
    தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு *
    திருவயிந்திரபுரமே 5 **
  • PT 3.1.6
    1153 கூன் உலாவிய மடந்தை தன் * கொடுஞ் சொலின்
    திறத்து இளங் கொடியோடும் *
    கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன்
    இடம் * கவின் ஆரும் **
    வான் உலாவிய மதி தவழ் மால் வரை *
    மா மதிள் புடை சூழ *
    தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய *
    திருவயிந்திரபுரமே 6 **
  • PT 3.1.7
    1154 மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம் *
    விலங்கலின்மிசை இலங்கை
    மன்னன் * நீள் முடி பொடிசெய்த மைந்தனது
    இடம் * மணி வரை நீழல் **
    அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் *
    பெடையொடும் இனிது அமர *
    செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு * தண்
    திருவயிந்திரபுரமே 7 **
  • PT 3.1.8
    1155 விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம் *
    வில் இறுத்து * அடல் மழைக்கு
    நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் *
    நிலவிய இடம் தடம் ஆர் **
    வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு *
    மலை வளர் அகில் உந்தி *
    திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு *
    திருவயிந்திரபுரமே 8 **
  • PT 3.1.9
    1156 வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் *
    விசயனுக்கு ஆய் * மணித் தேர்
    கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம் *
    குலவு தண் வரைச் சாரல் **
    கால் கொள் கண் கொடிக் கைஎழக் * கமுகு இளம்
    பாளைகள் கமழ் சாரல் *
    சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு *
    திருவயிந்திரபுரமே 9 **
  • PT 3.1.10
    1157 ## மூவர் ஆகிய ஒருவனை * மூவுலகு
    உண்டு உமிழ்ந்து அளந்தானை *
    தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் * தண்
    திருவயிந்திரபுரத்து **
    மேவு சோதியை வேல் வலவன் * கலி
    கன்றி விரித்து உரைத்த *
    பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப் *
    பாவங்கள் பயிலாவே 10 **