Your browser does not support the audio element.
audio
958 வாலிமாவலத்தொருவனதுடல்கெட *
வரிசிலைவளைவித்து * அன்று
ஏலம் நாறு தண்தடம்பொழிலிடம்பெற *
இருந்தநல்லிமயத்துள் **
ஆலிமாமுகிலதிர்தர அருவரை *
அகடுறமுகடேறி *
பீலிமாமயில்நடஞ்செயும் தடஞ்சுனைப் *
பிரிதிசென்றடைநெஞ்சே! (2)
959 கலங்கமாக்கடல்அரிகுலம் பணிசெய்ய *
அருவரையணைகட்டி *
இலங்கைமாநகர்ப்பொடிசெய்த அடிகள்தாம் *
இருந்தநலிமயத்து **
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன *
வேழங்கள் துயர்கூர *
பிலங்கொள்வாளெயிற்று அரியவைதிரிதரு *
பிரிதிசென்றடைநெஞ்சே!
960 துடிகொள்நுண்ணிடைச் சுரிகுழல் *
துளங்கெயிற்றிளங்கொடிதிறத்து * ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன் *
இருந்தநல்லிமயத்து **
கடிகொள்வேங்கையின் நறுமலரமளியின் *
மணியறைமிசை வேழம் *
பிடியினோடு வண்டிசைசொலத்துயில்கொளும் *
961 மறங்கொளாளரியுருவெனவெருவர *
ஒருவனது அகல்மார்வம்
திறந்து * வானவர்மணிமுடிபணிதர *
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் *
கிடந்தருகெரிவீசும் *
பிறங்குமாமணியருவியொடிழிதரு *
பிரிதிசென்றடைனெஞ்சே
962 கரைசெய்மாக்கடல் கிடந்தவன் *
கனைகழல் அமரர்கள் தொழுதேத்த *
அரைசெய்மேகலை அலர்மகளவளொடும் *
அமர்ந்த நலிமயத்து **
வரைசெய்மாக்களிறு இளவெதிர் வளர்முளை*
அளைமிகுதேன் தோய்த்து *
பிரசவாரிதன்னிளம்பிடிக்கு அருள்செயும்*
963 பணங்களாயிரமுடைய நல்லவரவணைப் *
பள்ளிகொள்பரமா! என்று *
இணங்கிவானவர்மணிமுடிபணிதர *
இருந்தநல்லிமயத்து *
மணங்கொள்மாதவி நெடுங்கொடி விசும்புற *
நிமிர்ந்தவைமுகில்பற்றி *
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டு இசைசொலும் *
964 கார்கொள்வேங்கைகள் கனவரைதழுவிய *
கறிவளர்கொடி துன்னி *
போர்கொள் வேங்கைகள் புனவரைதழுவிய *
பூம்பொழிலிமயத்துள் **
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந்து *
இனமலரெட்டுமிட்டு இமையோர்கள் *
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும் *
965 இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை *
இரும்பசியதுகூர *
அரவம் ஆவிக்கும் அகன்பொழில்தழுவிய *
அருவரையிமயத்து **
பரமனாதிஎம்பனிமுகில்வண்ணனென்று *
எண்ணிநின்றுஇமையோர்கள் *
பிரமனோடுசென்றுஅடிதொழும்பெருந்தகைப் *
966 ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு *
உறுதுயரடையாமல் *
ஏதமின்றி நின்றருளும்நம்பெருந்தகை *
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற *
தழல்புரையெழில்நோக்கி *
பேதைவண்டுகளெரியெனவெருவரு *
967 கரியமாமுகிற்படலங்கள்கிடந்து *
அவை முழங்கிட *
களிறென்று பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு *
பிரிதியெம்பெருமானை **
வரிகொள்வண்டறைபைம்பொழில்
மங்கையர் * கலியனது ஒலி மாலை *
அரியஇன்னிசைபாடுநல்லடியவர்க்கு *
அருவினை அடயாவே. (2)