Your browser does not support the audio element.
audio
968 முற்றமூத்துக்கோல்துணையா*
முன்னடிநோக்கிவளைந்து *
இற்றகால்போல்தள்ளிமெள்ள*
இருந்துஅங்குஇளையாமுன் **
பெற்றதாய்போல்வந்தபேய்ச்சி*
பெருமுலையூடு *
உயிரை வற்றவாங்கியுண்டவாயான்*
வதரிவணங்குதுமே (2)
969 முதுகுபற்றிக்கைத்தலத்தால் *
முன்னொருகோலூன்றி *
விதிர்விதிர்த்துக்கண்சுழன்று *
மேற்கிளைகொண்டிருமி **
இதுவென்னப்பர்மூத்தவாறென்று *
இளையவரேசாமுன் *
மதுவுண்வண்டுபண்கள்பாடும் *
வதரிவணங்குதுமே
970 உறிகள்போல்மெய்ந்நரம்பெழுந்து *
ஊன்தளர்ந்துள்ளமெள்கி *
நெறியைநோக்கிக்கண்சுழன்று *
நின்றுநடுங்காமுன் **
அறிதியாகில்நெஞ்சம்! அன்பாய் *
ஆயிரநாமஞ்சொல்லி *
வெறிகொள்வண்டுபண்கள்பாடும் *
971 பீளைசோரக்கண்ணிடுங்கிப் *
பித்தெழமூத்துஇருமி *
தாள்கள்நோவத்தம்மில்முட்டித் *
தள்ளிநடவாமுன் **
காளையாகிக்கன்றுமேய்த்துக் *
குன்றெடுத்துஅன்றுநின்றான் *
வாளைபாயும்தண்தடம்சூழ் *
972 பண்டுகாமரான வாறும் *
பாவையர்வாயமுதம் உண்டவாறும் *
வாழ்ந்தவாறும் *
ஒக்கவுரைத்திருமி **
தண்டுகாலாவூன்றியூன்றித் *
தள்ளிநடவாமுன் *
வண்டுபாடும்தண்டுழாயான் *
973 எய்த்தசொல்லோடுஈளையேங்கி *
இருமியிளைத்து *
உடலம் பித்தர்போலச்சித்தம்வேறாய்ப் *
பேசியயராமுன் **
அத்தன்எந்தைஆதிமூர்த்தி *
ஆழ்கடலைக்கடைந்த *
மைத்தசோதியெம்பெருமான் *
974 பப்பவப்பர்மூத்தவாறு *
பாழ்ப்பதுசீத்திரளையொப்ப *
ஐக்கள்போதவுந்த *
உன்தமர்காண்மினென்று **
செப்புநேர்மென்கொங்கைநல்லார் *
தாம்சிரியாதமுன்னம் *
வைப்பும்நங்கள்வாழ்வுமானான் *
975 ஈசிபோமின்ஈங்குஇரேன்மின் *
இருமியிளைத்தீர் *
உள்ளம் கூசியிட்டீரென்றுபேசும் *
குவளையங்கண்ணியர்பால் **
நாசமானபாசம்விட்டு *
நல்நெறிநோக்கலுறில் *
வாசம்மல்குதண்துழாயான் *
976 புலன்கள்நையமெய்யில்மூத்துப் *
போந்திருந்துள்ளமெள்கி *
கலங்கஐக்கள்போதவுந்திக் *
கண்டபிதற்றாமுன் **
அலங்கலாயதண்துழாய்கொண்டு *
ஆயிரநாமம்சொல்லி *
வலங்கொள்தொண்டர்பாடியாடும் *
977 வண்டு தண்டேனுண்டுவாழும் *
வதரிநெடுமாலை *
கண்டல்வேலிமங்கைவேந்தன் *
கலியனொலிமாலை **
கொண்டுதொண்டர்பாடியாடக் *
கூடிடில் நீள்விசும்பில் *
அண்டமல்லால்மற்றுஅவர்க்கு *
ஓராட்சி அறியோமே (2)