The Place Where the Lord on the Serpent Couch Resides is Tiruppiruti
அரவணையான் அமரும் இடம் திருப்பிருதி
963 பணங்களாயிரமுடைய நல்லவரவணைப் *
பள்ளிகொள்பரமா! என்று *
இணங்கிவானவர்மணிமுடிபணிதர *
இருந்தநல்லிமயத்து *
மணங்கொள்மாதவி நெடுங்கொடி விசும்புற *
நிமிர்ந்தவைமுகில்பற்றி *
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டு இசைசொலும் *
பிரிதிசென்றடைநெஞ்சே!