The Abode of Lord Kaṇṇa is Tiruppiruti
கண்ணபிரான் இருக்குமிடம் திருப்பிருதி
960 துடிகொள்நுண்ணிடைச் சுரிகுழல் *
துளங்கெயிற்றிளங்கொடிதிறத்து * ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன் *
இருந்தநல்லிமயத்து **
கடிகொள்வேங்கையின் நறுமலரமளியின் *
மணியறைமிசை வேழம் *
பிடியினோடு வண்டிசைசொலத்துயில்கொளும் *
பிரிதிசென்றடைநெஞ்சே!