PMT 2.4

என் மனம் தொண்டர்களையே வாழ்த்தும்

661 தோய்த்ததண்தயிர்வெண்ணெய்பாலுடன்உண்டலும் உடன் றாய்ச்சிகண்டு *
ஆர்த்ததோளுடையெம்பிரான் என்னரங்கனுக்கடியார்களாய் *
நாத்தழும்பெழநாரணாவென்றழைத்து மெய்தழும்பத்தொழு
தேத்தி * இன்புறும்தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென்நெஞ்சமே.
661 toytta taṇ tayir vĕṇṇĕy pāluṭaṉ uṇṭalum * uṭaṉṟu āycci kaṇṭu *
ārtta tol̤ uṭai ĕmpirāṉ * ĕṉ araṅkaṉukku aṭiyārkal̤āy **
nāt tazhumpu ĕzha nāraṇā ĕṉṟu azhaittu * mĕy tazhumpat tŏzhutu
etti * iṉpu uṟum tŏṇṭar cevaṭi * etti vāzhttum ĕṉ nĕñcame (4)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

661. My heart praises and worships the divine feet of the devotees of Ranga who call, worship, melt and praise Him, saying, “Nārana, you are our dear god. You were not afraid that Yashodā might punish you when she saw you stealing and eating the butter, good yogurt and milk. You stood there bravely and tapped your arms in front of her. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோய்த்த தோய்த்த; தண் தயிர் குளிர்ந்த தயிருடன்; வெண்ணெய் வெண்ணையையும்; பாலுடன் பாலையும்; உண்டலும் அமுது செய்தவுடன்; ஆய்ச்சி யசோதைப்பிராட்டி; கண்டு அதைப் பார்த்து; உடன்று கோபித்து; ஆர்த்த பிடித்துக் கட்டப்பட்ட; தோள் உடை புஜங்களையுடைய; எம்பிரான் பிரானான; என் அரங்கனுக்கு என் அரங்கனுக்கு; அடியார்களாய் அடியார்களாகி; நாத் தழும்பு எழ நாக்கு தழும்பேறும்படி; நாரணா! நாராயணா!; என்று அழைத்து என்று கூப்பிட்டு; மெய் தழும்ப உடம்பில் தழும்பேறுமளவு; தொழுது ஏத்தி துதித்து வணங்கி; இன்பு உறும் ஆனந்தமடைகின்ற; தொண்டர் சேவடி தொண்டர்களின் பாதங்களை; என் நெஞ்சமே என் மனம்; ஏத்தி வாழ்த்தும் துதித்து பாடும்