PMT 2.3

தொண்டர் அடிச்சேற்றைச் சென்னியில் அணிவேன்

660 ஏறடர்த்ததும்ஏனமாய்நிலம்கீண்டதும் முன்னிராமனாய் *
மாறடர்த்ததும்மண்ணளந்ததும் சொல்லிப்பாடி * வண்பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்டு அரங்கன்கோயில் திருமுற்றம் *
சேறுசெய்தொண்டர்சேவடிச்செழுஞ்சேறு என்சென்னிக்கணிவனே.
660 eṟu aṭarttatum eṉamāy nilam kīṇṭatum * muṉ irāmaṉāy *
māṟu aṭarttatum maṇ al̤antatum * cŏllip pāṭi ** vaṇ pŏṉṉip per-
āṟu pol varum kaṇṇa nīr kŏṇṭu * araṅkaṉ koyil-tirumuṟṟam *
ceṟu cĕy tŏṇṭar cevaṭic * cĕzhuñ ceṟu ĕṉ cĕṉṉikku aṇivaṉe (3)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

660. Devotees sing your glorious deeds of killing seven bulls, taking the form of a boar to rescue Mother Earth, conquering your enemy Ravanā as Rāma, coming as a dwarf and scaling the three worlds and as they sing, the tears that flood their eyes surge like the river Ponni, mix with the dust beneath their feet, making the temple threshold muddy. I shall bear this dust as a mark on my forehead.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏறு ஏழு ரிஷபங்களை; அடர்த்ததும் கொன்றதும்; ஏனமாய் பூமிப்பிராட்டிக்காக வராகமாய்; நிலம் பூமியைக் கோட்டால்; கீண்டதும் குத்தியெடுத்ததும்; முன் முன்பு; இராமனாய் இராமபிரானாய் பிறந்து; மாறு விரோதி ராவணனை; அடர்த்ததும் மாய்த்ததும்; மண் அளந்ததும் மூவுலகளந்ததும்; சொல்லிப் பாடி வாய்விட்டுப் பாடி; வண் பெறும்; பொன்னிப்பேர் வெள்ளமிட்டுவரும்; ஆறு போல் காவிரிபோல்; வரும் பெருகும்; கண்ண நீர் கொண்டு கண்ணீரினால்; அரங்கன் கோயில் அரங்கன் கோயில்; திருமுற்றம் ஸந்நதியை; சேறு செய் சேறாக்கும்; தொண்டர் அடியார்களின்; சேவடிச் செழுஞ் பாதங்களால் துகையுண்ட; சேறு சேற்றை; என் சென்னிக்கு என் நெற்றியில்; அணிவனே அணிந்திடுவேன்