PMT 2.5

தொண்டர்களை நினைத்து என் மெய் சிலிர்க்கிறது

662 பொய்சிலைக்குரலேற்றெருத்தமிறுத்துப் போரரவீர்த்தகோன் *
செய்சிலைச்சுடர்சூழொளித் திண்ணமாமதிள்தென்னரங்கனாம் *
மெய்சிலைக்கருமேகமொன்று தம்நெஞ்சில்நின்றுதிகழப்போய் *
மெய்சிலிர்ப்பவர்தம்மையேநினைந் தென்மனம்மெய்சிலிர்க்குமே.
662 pŏy cilaik kural eṟṟu-ĕruttam iṟuttap * por-aravu īrtta koṉ *
cĕy cilaic cuṭar cūzh ŏl̤it * tiṇṇa mā matil̤-tĕṉ araṅkaṉām **
mĕy cilaik karumekam ŏṉṟu * tam nĕñcil niṉṟu tikazhap poy *
mĕy cilirppavar tammaiye niṉaintu * ĕṉ maṉam mĕy cilirkkume (5)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

662. He killed seven evil bulls, breaking their horns, and He danced on the snake Kālingan. He has the color of a dark cloud and carries a heroic bow. Devotees feel ecstatic when they worship Ranganatha in Srirangam, surrounded by shining stone walls. When I think of His ardent devotees, my body also trembles in ecstasy!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பொய் சிலை கடுமையான கோபத்துடன்; குரல் உறுமும்; ஏற்று எருத்தம் காளைகளின் முசுப்பை; இறுத்து முறித்து; போர் தாக்க வந்த; அரவு காளியன் என்னும் நாகத்தை; ஈர்த்த கோன் அடக்கிய பெருமான்; செய் சிலைச் சுடர் கல்லினால் அமைக்கப்பட்டு; ஒளித் திண்ண ஒளியும் வலிமையும் மிக்க; மா மதில் சூழ் பெரிய மதில்கள் சூழ்ந்திருக்கும்; தென் அரங்கனாம் தென்னரங்க பிரான்; மெய் சிலை வில் உள்ள உடலோடு; கருமேகம் ஒன்று ஒரு காளமேகத்தை; தம் நெஞ்சில் நின்று தங்கள் மனதில் ஆழ்ந்து; திகழப் போய் இருக்கப் பெற்ற; மெய் சிலிர்ப்பவர் சரீரத்தில் சிலிர்ப்புறும்; தம்மையே நினைந்து அடியார்களை நினைத்து; என் மனம் என் மனம்; மெய் சிலிர்க்குமே மயிர்க்கூச்செறியும்
īrtta koṉ the Lord who subdued; aravu the serpent called Kaliya; por that came to attack; iṟuttu and broke; eṟṟu ĕruttam the horns of bulls; kural that was roaring; pŏy cilai with intense anger; tĕṉ araṅkaṉām is in Sri Rangam; mā matil cūḻ that is surrounded by tall walls; ŏl̤it tiṇṇa built with stong and radiant; cĕy cilaic cuṭar stones; tikaḻap poy thinking of Him; mĕy cilai the One with bow; karumekam ŏṉṟu with dark cloud-like complexion; tam nĕñcil niṉṟu deeply in their minds; mĕy cilirppavar their bodies shiver with devotion; tammaiye niṉaintu thinking of such devotees; ĕṉ maṉam my heart; mĕy cilirkkume gets goosebumps