நான்காம் பாட்டு -கடல்- அவதாரிகை – இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீ இவேகின்றதால் -என்று தம்முடைய பாபம் போன படியைச் சொன்னார் –
நாட்டுளே பாவம் எலாம் -என்று தாம் இருந்த தேசத்தில் உள்ளார் பாபங்களும் போம் படி சொன்னார்
தமக்கு யம வச்யதையும் போன படி சொன்னார் இதில் – தம்முடைய ஆக்ஜை நடக்கும் இடம் எல்லாம் யம வச்யதை புகரப் பெறாது என்கிறார் –
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால்