PAT 5.4.5

இருடீகேசன் என் உயிர்க்காவலன்

467 பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல் *
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் *
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன் *
என்னப்பா! என்னிருடீகேசா! என்னுயிர்க்காவலனே!
467 pŏṉṉaik kŏṇṭu uraikal mīte * niṟam ĕzha uraittāl pol *
uṉṉaik kŏṇṭu ĕṉ nāvakampāl * māṟṟu iṉṟi uraittukkŏṇṭeṉ **
uṉṉaik kŏṇṭu ĕṉṉul̤ vaitteṉ * ĕṉṉaiyum uṉṉil iṭṭeṉ *
ĕṉ appā ĕṉ iruṭīkecā! * ĕṉ uyirk kāvalaṉe! (5)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

467. Like rubbing gold on the touchstone to see its purity, I constantly wrote Your name on my tongue and sang Your praise. I placed You in my heart and myself within You O! my Father! Rishikesha! the protector of my life!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னப்பா! என் என் தந்தையே!; இருடீகேசா! என் ரிஷிகேசனே!; என் உயிர் என் உயிர்; காவலனே! காவலனே!; பொன்னைக் கொண்டு தங்கத்தை; உரைகல் மீதே உரைக்கல்லில் இட்டு; நிறம் எழ நிறம் பார்க்க; உரைத்தாற் போல் தேய்ப்பது போல; உன்னைக் கொண்டு உன்னைக் கொண்டு; என் நாவகம்பால் என் நாவினுள்ளே; மாற்று இன்றி மாற்று அழியும்படி; உரைத்து பேசிக் கொண்டு; கொண்டேன் நின்றேன்; உன்னைக் கொண்டு உன்னைக் கொண்டு; என்னுள் என் நெஞ்சினுள்; வைத்தேன் வைத்தேன்; என்னையும் அடியேனையும்; உன்னில் உன் திருவடிகளில்; இட்டேன் சமர்ப்பித்து விட்டேன்
ĕṉṉappā! ĕṉ oh my Father!; iruṭīkecā! oh my Rishikesha!; kāvalaṉe! the Protector of; ĕṉ uyir my life; uraittāṟ pol like rubbing; pŏṉṉaik kŏṇṭu the gold; uraikal mīte on grinding stone; niṟam ĕḻa to see its true color; uṉṉaik kŏṇṭu with You; ĕṉ nāvakampāl in my tongue; uraittu I kept speaking; māṟṟu iṉṟi until all the flaws are destroyed; kŏṇṭeṉ and stood there; vaitteṉ I have placed; uṉṉaik kŏṇṭu You; ĕṉṉul̤ in my heart; ĕṉṉaiyum as Your humble servant; iṭṭeṉ I have surrendered completely; uṉṉil at Your divine feet