PAT 5.4.3

நான் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்?

465 எம்மனா! என்குலதெய்வமே! என்னுடைய நாயகனே! *
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்? *
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம் *
சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே.
465 ĕmmaṉā! ĕṉ kulatĕyvame! * ĕṉṉuṭaiya nāyakaṉe! *
niṉṉul̤eṉāyp pĕṟṟa naṉmai * iv ulakiṉil ār pĕṟuvār? **
nammaṉ pole vīzhttu amukkum * nāṭṭil ul̤l̤a pāvam ĕllām *
cummĕṉāte kai viṭṭu oṭit * tūṟukal̤ pāyntaṉave (3)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

465. O! my king! the presiding deity of my clan! My Master! Who else could have got the goodness I have received by Your grace? All the sins of the world, like demons, that suppressed me and made me suffer have run away and hidden in the bushes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்மனா! எங்கள் மன்னனே!; என் எங்கள்; குலதெய்வமே! குலத்துக்கு தெய்வமே!; என்னுடைய என்னுடைய; நாயகனே! நாயகனே!; நின்னுளேனாய் உனக்கு ஆட்பட்டதனால்; பெற்ற நன்மை பெற்ற நன்மையை; இவ் உலகினில் இந்த உலகத்தில்; ஆர் பெறுவார்? வேறு யார் தான் பெறுவார்?; நம்மன் போலே பூத கணங்களைப் போல்; வீழ்த்து வீழ்த்தி; அமுக்கும் அமுக்கி நிற்கும்; நாட்டில் உள்ள உலகத்திலுள்ள; எல்லாம் எல்லாருடைய; பாவம் பாவங்களும்; சும்மெனாதே மூச்சுவிடவும் மாட்டாமல்; கை விட்டு தப்பி ஓடுபவரைப்போல; ஓடி ஓடிப்போய்; தூறுகள் புதர்களில்; பாய்ந்தனவே ஒளிந்து கொண்டன
ĕmmaṉā! our King!; ĕṉ our; kulatĕyvame! divine Protector of our lineage!; ĕṉṉuṭaiya my; nāyakaṉe! beloved Lord!; niṉṉul̤eṉāy because I have surrendered to You; pĕṟṟa naṉmai the blessings I have received; iv ulakiṉil in this world; ār pĕṟuvār? who else could ever receive them?; nammaṉ pole like demons; vīḻttu struck down; amukkum and crushed underfoot; pāvam the sins; ĕllām of all the people; nāṭṭil ul̤l̤a in the world; kai viṭṭu flee in fear; cummĕṉāte without even being able to breathe; oṭi they ran away,; tūṟukal̤ into the thickets; pāyntaṉave and hid themselves