Praising the Lord of Tirumāliruñcōlai Exceedingly: O He Who Was Born in Devakī's Womb! I Have Found You
திருமாலிருஞ்சோலை எம்பெருமானை மீக்கூறல் தேவகி வயிற்றில் பிறந்தவனே! உன்னைக் கண்டுக்கொண்டேன்
453 துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து *
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? *
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் *
சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். (2)