PAT 4.8.10

திருவரங்கன் புகழ் பாடுவோர்க்கு யாம் அடியோம்

411 பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை *
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் *
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு *
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2)
411 ## paru varaṅkal̤ avaipaṟṟip * paṭai ālittu ĕzhuntāṉai *
cĕru araṅkap pŏrutu azhitta * tiruvāl̤aṉ tiruppatimel **
tiruvaraṅkat tamizh-mālai * viṭṭucittaṉ virittaṉa kŏṇṭu *
iruvar aṅkam ĕrittāṉai * etta vallār aṭiyome (10)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

411. Vishnuchithan composed a garland of ten Tamil pāsurams describing the divine Srirangam, the Thiruppadi of the supreme god who fought and destroyed Rāvana when he, with many boons, came with a large army and opposed Rāma. Those who sing the pāsurams of Vishnuchithan will become the devotees of the lord who destroyed the two Rakshasās, Madhu and Kaitapa.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பரு வரங்கள் பெரிய வரங்களை; அவை பற்றி பலமாகப் பற்றிக் கொண்டு; படை ஆலித்து படையின் ஆரவாரத்துடன்; எழுந்தானை புறப்பட்ட இராவணனை; செரு அரங்க யுத்தத்திலே ஒழியும்படி; பொருது அழித்த போர் செய்து அழித்த; திருவாளன் லக்ஷ்மியின் பதி; திருப்பதி மேல் உறையும் திருப்பதி பற்றி; திருவரங்க திருவரங்க; தமிழ் மாலை தமிழ் பாசுரங்களை; விட்டுசித்தன் பெரியாழ்வார்; விரித்தன அருளிச் செய்த பாசுரங்களை; கொண்டு அனுசந்தித்து; இருவர் மது கைடபர்களாகிற; அங்கம் இருவருடைய உடலை; எரித்தானை தீக்கிரையாக்கியவனை; ஏத்தவல்லார் துதிக்க வல்லவர்களுக்கு; அடியோமே நாம் அடிமைகளே!
tamiḻ mālai these tamil hymns; virittaṉa composed by; viṭṭucittaṉ Periazhwar; tiruvaraṅka about Sri Rangam; tiruppati mel the residing place of; tiruvāl̤aṉ the Husband of Sri Lakshmi; pŏrutu aḻitta who fought in the war and; cĕru araṅka destroyed; ĕḻuntāṉai Ravana, who set out; paṭai ālittu with the roar of the army; paru varaṅkal̤ with great boons; avai paṟṟi as his strength; kŏṇṭu those who recite them; aṭiyome will will become servants; ettavallār to those who praise; ĕrittāṉai the Lord who destroyed; aṅkam the bodies of; iruvar two Rakshasās, Madhu and Kaitapa