PAT 4.8.9

நீலநிற நெடுமால் ஊர் ஸ்ரீரங்கம்

410 குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல் *
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர் *
குன்றூடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி *
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே.
410 kuṉṟu āṭu kŏzhu mukil pol * kuval̤aikal̤ pol kuraikaṭal pol *
niṉṟu āṭu kaṇamayil pol * niṟam uṭaiya nĕṭumāl ūr **
kuṉṟu ūṭu pŏzhil nuzhaintu * kŏṭi iṭaiyār mulai aṇavi *
maṉṟu ūṭu tĕṉṟal ulām * matil araṅkam ĕṉpatuve (9)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

410. He has the lovely color of a beautiful dancing peacock, the blue color of the sounding ocean and the color of dark kuvalai blossoms and of the thick clouds that move above the high hills He resides in Srirangam, surrounded by walls where the breeze blows through the yards, touching the breasts of women with vine-like waists and enters into the groves that grow thick on the hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென்றல் தென்றல் காற்றானது; குன்று பொழில் ஊடு குன்றிலுள்ள சோலைகளுள்; நுழைந்து நுழைந்து; கொடி கொடி போன்ற; இடையார் இடையுடைய பெண்களின்; முலை அணவி மார்பகத்தைத் தழுவி; மன்று ஊடு நாற்சந்திகளினூடே; உலாம் உலாவும்; மதிள் அரங்கம் மதிள்களையுடைய திருவரங்கம்; என்பதுவே என்பதுதான்; குன்று ஆடு மலை உச்சியைத் தொடும்; கொழு முகில் போல் நீர் நிறைந்த மேகம் போலவும்; குவளைகள் போல் கருநெய்தல் மலர் போலவும்; குரை கடல் போல் ஒலிசெய்யும் கடல் போலவும்; நின்று ஆடு நின்று ஆடும்; கணமயில்போல் மயில் கணங்கள் போலவும்; நிறமுடைய வண்ண அழகையுடையவனான; நெடுமால் ஊர் எம்பெருமானின் ஊர்
tĕṉṟal Like a gentle breeze; nuḻaintu that enters; kuṉṟu pŏḻil ūṭu the groves on the hill; mulai aṇavi and embrace the bosoms of; iṭaiyār women with hips; kŏṭi like a creeper; ulām one wanders; maṉṟu ūṭu through the four streets of; ĕṉpatuve of what is called; matil̤ araṅkam Sri Rangam which has tall walls; nĕṭumāl ūr its the city of the Lord; niṟamuṭaiya who has vibrant beauty; kaṇamayilpol like the peacocks that; niṉṟu āṭu stand and dance; kurai kaṭal pol who is like the roaring sea; kuval̤aikal̤ pol and like a dark lotus flower; kŏḻu mukil pol and like a cloud; kuṉṟu āṭu that touches the mountain peak