அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால் மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள் செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் –4-6-2-
பதவுரை
அங்கு–அந்த நீசரிடத்தில் ஒரு கூறை–ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று) அரைக்கு உடுப்பதன் ஆசையால்–அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால் மங்கிய–கெட்டுக் கிடக்கிற மானிட சாதி பேர் இடும்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய