PAT 4.1.7

அருச்சுனன் தேர்மிசை நின்ற கண்ணன்

334 வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் *
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் *
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று *
கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.
334 வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் * ஏந்து கையன் *
உள்ள இடம் வினவில் * உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் **
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் * தேர்மிசை முன்புநின்று *
கள்ளப் படைத்துணை ஆகிப் * பாரதம் கைசெய்யக் கண்டார் உளர் (7)
334 vĕl̤l̤ai vil̤icaṅku vĕñcuṭart tiruccakkaram * entu kaiyaṉ *
ul̤l̤a iṭam viṉavil * umakku iṟai vammiṉ cuvaṭu uraikkeṉ **
vĕl̤l̤aip puravik kurakku vĕlkŏṭit * termicai muṉpuniṉṟu *
kal̤l̤ap paṭaittuṇai ākip * pāratam kaicĕyyak kaṇṭār ul̤ar (7)

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

334. If you want to know the place of god with a sounding white conch in his left hand and a divine shining discus(Chakra) in his right, come, I will tell you. He drove the chariot yoked to white horses and decorated with victorious monkey flag in the Bhārathā war wherein he used his tricks to help Arjunā. There are people who saw Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வெள்ளை வெண்மையான; விளிசங்கு பாஞ்சசன்னியத்தையும்; வெஞ்சுடர் வெம்மையான ஒளியுடையதுமான; திருச்சக்கரம் திருச்சக்கரத்தையும்; ஏந்து கையன் ஏந்தியிருக்கும் கண்ணன்; உள்ள இடம் வினவில் இருக்குமிடம் கேட்பீராகில்; உமக்கு இறை வம்மின் உங்களுக்கு சிறிய; சுவடு அடையாளம்; உரைக்கேன் வம்மின் கூறுகிறேன் வாருங்கள்; வெள்ளைப் புரவி வெள்ளைக் குதிரகைள் பூட்டிய; குரக்கு வானர; வெல்கொடி வெற்றிக்கொடியையுடைய; தேர்மிசை முன்பு தேரின் முன்பு; நின்று சாரதியாய் நின்று; கள்ளப் படை பாண்டவர் சேனைக்குக் கள்ளத்தனமாக; துணை ஆகி துணை நின்று; பாரதம் பாரதப் போரில்; கை செய்ய உதவி செய்ததை; கண்டார் உளர் பார்த்தவர்கள் உள்ளனர்
ul̤l̤a iṭam viṉavil if you want to know the residing place of; entu kaiyaṉ Kannan holding; vĕl̤l̤ai white; vil̤icaṅku panchajanyam (conch) and; tiruccakkaram the holy wheel; vĕñcuṭar radiating white light; umakku iṟai vammiṉ I will give you; cuvaṭu a hint; uraikkeṉ vammiṉ come and I will tell; kaṇṭār ul̤ar there are those who have seen; niṉṟu Kannan as a charioteer; termicai muṉpu seated in the front of the carriot harnessed; vĕl̤l̤aip puravi with white horses in the front; kurakku and with a monkey; vĕlkŏṭi flag on the top; tuṇai āki stood by the side of; kal̤l̤ap paṭai pandavas; pāratam in the mahabharatha war; kai cĕyya and helped them